வரியில்லா பட்ஜெட்-குடித்துவிட்டு ஓட்டினால் லைசென்ஸ் ரத்து-சென்னையில் 2வது டைடல் பார்க் திருச்சி, கோவையில் தொழில்நுட்ப பல்கலைகள்
சென்னை:
படு பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.2006-07ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். இதில் புதிய வரிகள் ஏதும்விதிக்கப்படவில்லை.
பட்ஜெட் முழு விவரம்:
தமிழில் தயாரிக்கப்படும் உரிமம் பெறப்பட்ட மென்பொருட்களுக்கு (சாப்ட்வேர்) வரி விலக்கு அளிக்கப்படும்.வேலைநிறுத்தத்தின்போது உயிரிழந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி அளிக்கப்படும்.
மதிப்புக் கூட்டு வரித் திட்டம் (வாட்) 2007, ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும்
அரசு ஊழியர்கள் 30 ஆண்டுகள் பணியாற்றினால் முழு ஓய்வூதியம் அளிக்கப்படும்.இதுவரை இது 33 ஆண்டுகளாக இருந்தது.
பருப்பு, பயறு வகைகள், சமையல் எண்ணெய் மீது முழு வரி விலக்கு அளிக்கப்படும்.
மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள 11,691 பேருக்கு ரூ. 50 கோடியில் மாற்றுப் பணி பயிற்சிமற்றும் மறுவாழ்வுத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை அகதிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ. 400 ஆக உயர்த்தப்படும்
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலக தமிழ் செம்மொழி ஆராய்ச்சி நிறுவனமாக்கப்படும்.
நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ. 500லிருந்து ரூ 1,000 ஆகஉயர்த்தப்படும்.
பரிதிமாற் கலைஞருக்கு நினைவு தபால் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும், அவரது வீடுநினைவிடமாகும், நூல்கள் அரசுடமையாக்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலையில்லாமல்இருப்பவர்களுக்கு, பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 150ம், பிளஸ்டூமுடித்தவர்களுக்கு ரூ 200ம், பட்டதாரிகளுக்கு ரூ. 300ம் நிதியுதவி 3 ஆண்டுகளுக்குவழங்கப்படும்.
பொற்கொல்லர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். அதில் உறுப்பினராகசேருவோருக்கு மாதம் ரூ. 300 ஓய்வூதியம் தரப்படும்.
சுனாமி நிவாரணப் பணிகளுக்கு மேலும் ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கர்ப்பிணிகளுக்கு 6 மாதங்களுக்கு தலா ரூ. 1,000 நிதியுதவி வழங்கப்படும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கை விளக்குகள், ஐஸ் வண்டிகள், வலைகள் வாங்குவதற்காக ரூ. 100 கோடிவழங்கப்படும்.
முதியோர், ஊனற்றோர் உதவித் தொகை மாதம் ரூ. 200லிருந்து 400 ஆக உயர்த்தப்படும்.
சொந்தமாக தொழில் செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம்அளிக்கப்படும்.
தமிழகத்தில் புதிய சாலைகள், புதிய பாலங்கள் கட்ட ரூ. 2,461 கோடி ஒதுக்கீடு.
மதுரையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க ரூ. 70 கோடியில் 2வது சுற்றுச் சாலை (ரிங் ரோடு) அமைக்கப்படும்.
திருப்பூரில் ரூ. 70 கோடி மதிப்பில் வட்டச் சாலை, அணுகு சாலைகள் அமைக்கப்படும்.சிறப்புத் தொழில் பெருவழிச் சாலை (இன்பிராஸ்டக்சர் காரிடார்) அமைக்கப்படும். இச்சாலையுடன் விமானநிலையங்கள், துறைமுகங்கள் இணைக்கப்படும்.
சென்னை அருகே ஒரகடம் என்ற இடத்தில் வாகனச் சோதனை மையம் அமைய முயற்சிகள் எடுக்கப்படும்.
தென் மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை தரப்படும்
சென்னை தரமணியில் 2வது டைடல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையிலும் டைடல் பூங்காவை அமைக்க நடவடிக்கை.
இன்போசிஸ் நிறுவனம் மூலம் சாப்ட்வேர் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க திட்டம்.
நடப்பாண்டுக்கு இலவச கலர் டிவி திட்டத்திற்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு
திருச்சி, கோவையில் புதிய அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். முதல் கட்டமாக இந்த ஆண்டில் விழுப்புரத்தில் புதியஅரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும்.
45,957 காண்ட்ராக்ட் ஆசிரியர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
மாணவ மாணவியருக்கு இலவச பஸ் பாஸ், சைக்கிள் வழங்கும் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
10, 12வது வகுப்பு முடித்துச் செல்லும்போதே மாணவர்களுக்கு ஜாதி, வாழ்விட, குடும்ப வருமான சான்றிதழ்வழங்கப்படும்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் 380 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட முன் வரும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும்.இந்த நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு உச்ச வரம்பின்றி வரி விலக்கு அளிக்கப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்க ஆய்வு மையம் நிறுவப்படும்.
வரும் முன் காப்போம் திட்டம் மூலம் 9,000 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்
கிராமப்புற மருத்துவமனைகளுக்கு 190 ஆம்புலன்ஸுகள் வழங்கப்படும்.
1,417 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு செமி ஆட்டோ அனலைசர் கருவிகள்.
காவிரி பிரச்சனையில் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை விரைவில் பெற நடவடிக்கை எடுக்கப்படும்
மதுரையில் மழைக் காலங்களில் கண்மாய் நீர் ஊருக்குள் புகுவதைத் தடுக்க, கால்வாய்களை தூர் வாரவும், உரியவடிகால்கள் அமைக்கவும் ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளத் தடுப்புக்கு ரூ. 279 கோடியில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும்
காவலர்களின் நலனுக்காகவும், காவலர்கள் குறை தீர்க்கவும் 3வது போலீஸ் கமிஷன் அமைக்கப்படும்
குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களின் லைசென்ஸையே ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
காவல்துறையை நவீனமாக்க ரூ. 68 கோடி ஒதுக்கப்படும்.
தீயணைப்புப் படைகள் துறைக்கு ரூ. 23 கோடியில் புதிய தீயணைப்பு வாகனங்கள், நவீன கருவிகள்வாங்கப்படும்
உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்காக ரூ. 2 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்
பள்ளிகளில் கட்டாயத் தமிழ்க் கல்வி அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக 10ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications