கோவையை தகர்க்க பயங்கர சதி: வெடிகுண்டுகளுடன் சிக்கிய கேரள கும்பல்
கோவை:
கோவை நகரின் பல்வேறு முக்கிய இடங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க போடப்பட்ட மிகப் பெரிய சதித்திட்டத்தை போலீஸார் முறியடித்துள்ளனர். இதுதொடர்பாக 7 பேர் கொண்ட கேரள கும்பலை போலீஸார் கைதுசெய்தனர்.
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டு,தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையிலும்சென்னையிலும் மிக பலத்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந் நிலையில் நேற்றிரவு குறிச்சி பகுதியில் போலீஸார் ரோந்து வந்தபோது ஒரு நபர் சந்தேகத்துக்கிடமானவகையில் நடமாடினார். அவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடம் சோதனையிட்டபோது 2 பைப்வெடிகுண்டுகள் இருந்தன.
இதையடுத்து அந்த நபரை சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்குப் போலீஸார் அழைத்துச் சென்று தீவிரவிசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கேரளாவைச் சேர்ந்த அந்த நபருடன் சேர்த்து மொத்தம் 7 பேர் கோவைக்கு வந்துள்ளதும், அவர்கள் கோவைநகரில் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.
மற்ற 6 பேரும் நஞ்சுண்டாபுரத்தில் ஒரு வீட்டில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வீட்டைஆயுதம் தாங்கிய படையினருடன் சென்று போலீசார் முற்றுகையிட்டனர்.
கதவை உடைத்துச் சென்று அவர்களை வளைத்துப் பிடித்தனர். அந்த வீட்டில் 12 பைப் வெடிகுண்டுகள், 7 நாட்டுவெடிகுண்டுகள், 15 கிலோ வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் ஆகியவை இருந்தன.அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், கோவை நகர வரைபடமும் இருந்தது. அதில் முக்கிய அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத் தலங்கள்,மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒப்பணகாரத் தெரு, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட சில பகுதிகள்வட்டமிடப்பட்டிருந்தன.
இந்தப் பகுதிகளில் வெடிகுண்டுகள் வைத்துத் தகர்க்க அக்கும்பல் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
கேரளாவைச் சேர்ந்த இந்த 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணைநிடத்தப்பட்டு வருகிறது. கோவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முன்பு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு அல்-உம்மா தவிர கேரள கும்பல்களும் முக்கியகாரணமாக இருந்தது நினைவுகூறத்தக்கது.
மத்திய அரசு எச்சரிக்கை-சென்னை உஷார்:
இந் நிலையில் மத்திய அரசு எச்சரிக்கையின் எதிரொலியாக சென்னையில் வர்த்தக வளாகங்கள், தொழில்நுட்பமையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து டெல்லி, சென்னை, பெங்களூர், கொல்கத்தா ஆகிய மாநகரங்களில்தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுத்துறைக்கு எச்சரித்துள்ளது.
இதனால் 5 மாநகர போலீசாருக்கும் மத்திய உளவுத்துறை ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். டெல்லிக்குஅடுத்த நிலையில், சென்னைக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை வந்துள்ளதால் நகரில் பாதுகாப்புபலப்படுத்தப்படுள்ளது.
இதுகுறித்து உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா, டிஜிரி முகர்ஜி ஆக்யோருடன் போலீஸ் கமிஷனர் லத்திகாசரண் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக்கு பின்னர் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்பென்சர் பிளாசா உள்பட் பல வர்த்தக வளாகங்கள், தரமணி டைடல் பார்க் உள்ளிட்ட தகவல்தொழில்நுட்ப மையங்கள், பேருந்து நிலையங்கள், சென்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயில்கள்,மசூதிகள், சர்ச்சுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நகரின் முக்கிய இடங்களில் இரவு-பகலாக வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
மின்சார ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு செல்கின்றனர். வர்த்தக வளாகங்களில் ஒருஉதவி கமிஷனர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications