பட்ஜெட்டை புறக்கணித்த ஜெ-பரிதவித்த நிருபர்கள் ராமநாதபுரத்துக்கு காவிரி நீர்-பாபுவுக்கு கடைசி சீட்
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாகலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
சட்டசபையில் இன்று நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதுதான் அவர் தாக்கல்செய்யும் முதல் பட்ஜெட் ஆகும். நிதானமான வேகத்தில் அவர் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பட்ஜெட்உரையை வாசித்தார்.இன்றைய கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவிஜெயலலிதா மட்டும் வரவில்லை. சட்டசபையில் இருக்கை மாற்றம் தொடர்பாக கடும் ஆட்சேபனைதெரிவித்திருந்தார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா, மாநில திட்டக் குழு துணைத் தலைவர் நாகநாதன், கருணாநதியின்துணைவி ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி உள்ளிட்டோர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைபார்வையாளர் மாடத்திலிருந்து பார்வையிட்டனர்.
புதிய இருக்கை மாற்றத்தால் உறுப்பினர்கள் வசதியாக இருக்கைகளில் அமர்ந்திருப்பதை பார்க்க முடிந்தது.முன்பு உறுப்பினர்களிடையே நெருக்கடி காணப்படும். ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டிருப்பது போலவேஉட்கார்ந்திருப்பார்கள். தற்போது அது நீங்கியுள்ளது. படு ஃப்ரீயாக உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.
தவிப்புக்குள்ளான நிருபர்கள்:
சட்டசபையில் நிருபர்களுக்கான இருக்கைகள் குறைக்கப்பட்டதால் செய்தியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழக சட்டசபையில் இருக்கைகள் பெருமளவில் மாற்றப்பட்டுள்ளன. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது பத்திரிக்கை நிருபர்கள்தான்.வழக்கமாக 30 பத்திரிக்கையாளர்கள் வரை அமரக் கூடிய வகையில் இருக்கை வசதி இருந்தது. தற்போது இது வெறும் 11 சீட்டாக குறைக்கப்பட்டுவிட்டது.
மற்ற நிருபர்களுக்கு சட்டசபையின் முதல் மாடியில் இடம் தரப்பட்டுள்ளது. புதிய முறைப்படி இன்று கூடிய சட்டசபைக் கூட்டத்தின்போது, கீழே உள்ள 11இடங்களிலும் திமுக ஆதரவு நாளிதழ்களின் நிருபர்கள்தான் அதிகம் இடம் பிடித்திருந்தனர். முரசொலி, தினகரன், தமிழ் முரசு மற்றும் சன் டிவி நிருபர்களே நான்குஇருக்கைகளை ஆக்கிரமித்து விட்டனர். மற்ற இருக்கைகளில் தினத்தந்தி, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகியோருக்கு இடம் தரப்பட்டிருந்தது.
தினமலர், ஜெயா டிவி உள்ளிட்ட பிற பத்திரிக்கை நிருபர்களுக்கு மேல் மாடியில் இடம் தரப்பட்டிருந்தது. இதில் மேல் மாடியில் இருந்தவர்களுக்குத்தான்சிக்கல் அதிகம். குறிப்பாக மாலை நாளிதழ் நிருபர்கள் உடனுக்குடன் தங்கள் அலுவலகத்துக்கு செய்தியைத் தந்தாக வேண்டும். சட்டசபைக்குள் செல்போன்பயன்படுத்தக் கூடாது. இதனால் அவர்கள் அனைவரும் மேல் மாடியிலிருந்து கீழே ஓடி வந்து அங்குள்ள செய்தியாளர் அறையிலிருந்து தொலைபேசி மூலம்செய்திகளை கொடுத்துக் கொண்டிருந்தனர்.
சேகர் பாபுவுக்கு கடைசி சீட்:
கடந்த கூட்டத் தொடரின்போது பெரும் கலகத்தில் ஈடுபட்டு முதல்வர் கருணாநிதியையே அடிக்கப் பாய்ந்த அதிமுக உறுப்பினர் சேகர் பாபுவுக்கு இப்போதுகடைசி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூருக்கு மாநகராட்சி அந்தஸ்து:
அன்பழகன் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் திருப்பூர் நகரம் மாநகராட்சியாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். பின்னலாடை ஏற்றுமதியில்திருப்பூர் முன்னணி இடத்தில் உள்ளது. இந்த நகரின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செம்மையான முறையில் அளிக்கும்வகையில், திருப்பூர் நகராட்சி, மாநகராட்சியாக உயர்த்தப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், நகரங்களில் பல ஆண்டுகளாக நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, காவிரி நீரைக்கொண்டு வரும் ரூ. 671 கோடி மதிப்பிலான பெரும் திட்டத்தின் பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என்று தெரிவித்தார் அன்பழகன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications