லெபனானிலிருந்து திரும்பிய 441 தமிழர்கள்: இஸ்ரேல் குண்டு வீச்சில் இந்தியர் பலி
சென்னை:
இஸ்ரேலின் சரமாரித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள லெபனான் நாட்டிலிருந்து 441தமிழர்கள் விசேஷ விமானம் இந்தியா திரும்பியுள்ளனர். இவர்களில் 342வெள்ளிக்கிழமை இரவு சென்னைக்கு வந்தனர்.
இஸ்ரேலின் சரமாரித் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது லெபனான்.இதனால் அங்குள்ள வெளிநாட்டவர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பத்தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டு மக்களை கப்பல்கள்,விமானங்களை அனுப்பி மீட்டு வருகின்றன.லெபனானில் இந்தியர்கள் 13,000 பேர் உள்ளனர். அவர்களை பத்திரமாக அங்கிருந்துவெளியேற்றும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதையடுத்து 4 போர்க்கப்பல்களை இந்தியா லெபனானுக்கு அனுப்பி வைத்தது.
அதில் ஐஎன்எஸ் மும்பை மூலம் 700 இந்தியர்கள் சைப்ரஸ் நாட்டுக்குவரவழைக்கப்பட்டனர். இதேபோல ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா மூலம் மேலும் 700 பேர்சைப்ரஸ் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டனர்.
இவர்களில் 441 பேர் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்குஅழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 342 பேர் தமிழர்கள் ஆவர். இந்த விமானம்வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்து சேர்ந்தது.
இவர்களை விமான நிலையத்தில் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறைஅமைச்சர் வயலார் ரவி, தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தங்கம்தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதேபோல இன்னொரு விசேஷ விமானம் 255 பேருடன் மும்பையில் தரைஇறங்கியது. அவர்களில் 100 பேர் தமிழர்கள். மொத்தம் வந்த 607 பேரில் 441 பேர்தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவில் டெல்லியைச் சேர்ந்தவர்கள் 53 பேர், மகாராஷ்டிரத்தைச்சேர்ந்தவர்கள் 43 பேர், கேரளாவைச் சேர்ந்தவர்கள் 10 பேர், பஞ்சாபைச்சேர்ந்தவர்கள் 6 பேர். ஆந்திராவைச் சேர்ந்த 2 பேரும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இதற்கிடையில் லெபனான் மீது வியாழக்கிழமையன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில், தேவிஷ்குமார் செய்வால் என்ற இந்தியர் ஒருவர் பலியாகிவிட்டதாகவெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா தெரிவித்தார்.
ஆனால் அவரது உடல் எங்கு இருகிறது, எப்போது கொண்டு வரப்படும் என்றுதெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications