Lovers get married through legal cell!
சென்னை:
ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த இந்து-முஸ்லிம் காதல் ஜோடிக்கு இலவச சட்ட உதவி மையத்தில் திருமணம்நடந்தது.
குடியாத்தத்தைச் சேர்ந்த இஸத். சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.அங்கு வேலை பார்க்கும் பெரம்பூரைச் சேர்ந்து உமா மகேஸ்வரியை இஸத் காதலித்தார்.மதங்களை மறந்து இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு உமா கூறியபோது இஸத் ஏற்க மறுத்துவிட்டார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உமா, சென்னை மகாகவி பாரதி நகர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதுதெரிந்தும் முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இஸத் மனு செய்தார்.
அதை விசாரித்த நீதிபதி பெரிய கருப்பையா. இலவச சட்ட உதவி மையத்தில் இந்தப் பிரச்னையை பேசித்தீர்த்துகொள்ளுமாறு உத்தரவிட்டார். அதன்படி, இந்தப் பிரச்சனையை ஓய்வு பெற்ற நீதிபதி கெங்குசாமிதலைமையில் ஒரு குழு விசாரித்தது.
மதம் தான் திருமணத்துக்குத் தடையாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காதலர்களின் குடும்பத்தினரிடம்சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர். இதனால்உமா மகேஸ்வரியின் பெயர் ரசீதா பேகம் என்று மாற்றப்பட்டது. புளியந்தோப்பு மசூதியில் இருவருக்கும்முஸ்லிம் முறைப்படி நேற்று திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் மாலையும் கழுத்துமாக கணவருடம் இலவச சட்ட உதவி மையத்துக்கு வந்த ரசீதா பேகம்என்ற உமா மகேஸ்வரி, தங்களை சேர்த்து வைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications