விஜயகாந்த்துக்கு ரஜினி வாழ்த்து!
சென்னை:
அரசியல் குதிரையில் ஏறி உட்கார்ந்துள்ள விஜயகாந்த் முதல் சுற்றில் வெற்றி பெற்றுவிட்டார். தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த்கூறியுள்ளார்.
![]() |
ரஜினியின் பேச்சு: 50 ஆண்டுகளுக்கு முன்பு துடிப்பான 2 இளைஞர்கள் நெஞ்சில்துடிப்பு, ஆர்வம், லட்சியங்களோடு இந்தக் கடற்கரைக்கு வந்தனர். காதலித்தபெண்ணை மணந்து கொண்டு, மனம் போல பணம் சம்பாதித்து வாழ்க்கையில்செட்டில் ஆகி விட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், இந்த மண்ணுக்கு ,நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து அந்த இரண்டு இளைஞர்களும்இந்த வங்கக் கடலோரத்தில் நடந்தார்கள்.
![]() |
அந்த அளவுக்கு நான் வாழ்ந்து காட்டுவேன் என்றார். நீ அந்த மாதிரி செய்தால்உனக்கு நானே சிலை வைக்கிறேன் என்று இன்னொரு இளைஞர் கூறினார்.
அதற்கு முதல் இளைஞர், பைத்தியக்காரா, நீ எனக்கு சிலை வைக்க வேண்டும்என்றால், நீ என்னை விட தகுதியானவனாக இருக்க வேண்டும், என்னை விட பெரியஆளாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அந்த இளைஞர்களில் ஒருவர் பெயர் கருணாநிதி, இன்னொருவர் வி.சி.கணேசன்.காலப்போக்கில் அவர்கள் பெயர்கள் மாறின, உருவங்களும் மாறின. இவர் கலைஞர்ஆனார், அவர் சிவாஜி கணேசன் ஆனார்.
![]() |
அரசியல் என்பது ஒரு மாதிரி குதிரை, சினிமா என்பது இன்னொரு மாதிரி குதிரை.எம்.ஜி.ஆர். அந்த இரண்டு குதிரைகளிலும் ஏறிப் பழக்கப்பட்டவர். இப்போதுவிஜயகாந்த் அரசியலில் இறங்கி இருக்கிறார்.
முதல் சுற்றில் அவர் வெற்றி பெற்று விட்டார். அவர் தொடர்ந்து வெற்றி பெறவாழ்த்துகள். அந்தக் குதிரையை ஓட்டுவதற்கு மிகப் பெரிய திறமை வேண்டும். நல்லஜாக்கி வேண்டும்.
இங்கு மஞ்சள் துண்டு போட்டு இருப்பவரைப் பாருங்கள். இவர் தமிழகத்தில்மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் சிறந்தவர். அரசியலில் எம்.ஜி.ஆர். கருணாநிதிஇருவரும் 2 குதிரைகளை ஓட்டுவதற்கு மிகச் சிறந்த திறமை பெற்றவர்கள் என்றார்ரஜினிகாந்த்.
நிகழ்ச்சிக்கு அதிமுகவைச் சேர்ந்த நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, பாண்டியன்,நடிகைகள் விந்தியா, கோவை சரளா உள்ளிட்ட யாருமே வரவில்லை. அதேபோலஇயக்குநர் பாரதிராஜா, பாலச்சந்தர் உள்ளிட்ட பிரபலங்களும் வரவில்லை.
திரையுலம் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து நடிகர் திலகத்தை வாழ்த்தும் என்றஎதிர்பார்ப்பு இவர்கள் வராததால் பொய்த்துப் போனது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்















Click it and Unblock the Notifications