சிவாஜி கணேசன் சிலை திறக்கப்பட்டது!
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை முதல்வர் கருணாநிதி சென்னை மெரீனாகடற்கரையில் நடந்த விழாவில் திறந்து வைத்தார். திரையுலகின் முன்னணிக்கலைஞர்கள் திரண்டு வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
![]() |
முதல்வர் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சிவாஜியின் மனைவிகமலா அம்மாள், அவரது மகள்கள், மகன்கள் ராம்குமார், பிரபு, நடிகர்கள் ரஜினிகாந்த்,கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், விஜய், விக்ரம், இயக்குநர்கள், நடிகைகள்உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் வந்திருந்த ஏராளமான சிவாஜி கணேசன் ரசிகர்களும், காங்கிரஸ்கட்சியினரும் கூட்டத்தை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக நேற்று காலைஆறு மணிக்கு முதல்வர் கருணாநிதி சிவாஜி குறித்து எழுதிய பாடலை, பாடகர்சீர்காழி சிவசிதம்பரம் தனது கணீர்க் குரலில் பாடி கூடியிருந்தவர்களைஉணர்ச்சிவசப்பட வைத்தார்.
கருணாநிதி எழுதிய பாடல்:
சிங்கத் தமிழனடா, சிவாஜி கணேசனடா
எங்கும் புகழ் மணக்கும் எங்கள் தங்கமடா!
வங்கக் கடலோரம் சிலையாக வந்தாரடா
வாழும் நாளெல்லாம் கலையாக வாழ்ந்தாரடா
பொங்கு தமிழர் கண்டெடுத்த புதையலடா
புத்தர் வழி வந்த காந்தி மகான் பக்தரடா
பெருந்தலைவர் காமராசர்
விரும்பி நின்ற வீரமிகு தளபதியடா
பெரியார்க்குப் பிரியமுள்ள பேரனடா
வறியோர்க்கு வாரி இறைத்த வள்ளலடா
பேரறிஞர் அண்ணாவின் தம்பியடா
பெருங்குடும்பம் கலைக் குடும்ப
அருங்கலைஞர் ஆருயிர் நண்பனடா
அவர் உயிர்க்கும் மேலான தோழனடா
!அலைகடல் பெருகி எதிர்த்தபோதும்
மலை பல உருண்டு தடுத்த போதும்
கலையுலக வேந்தனுக்குக் கட்டாயம்
சிலை வைத்தே தீருவோம் என்ற
நிலை குலையா நெஞ்சத்தைப் பெற்றோமடா
தலை வணங்காத் தமிழனுக்கு
தமிழ்க் குலம் போற்றுகின்ற
தன்மானக் கடமைதனைச் செய்தோமடா
சிங்கத் தமிழனடா; சிவாஜி கணேசனடா
எங்கும் புகழ் மணக்கும் எங்கள் தங்கமடா!
பின்னர் வைரமுத்து, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பாக்யராஜ், பிரபுஆகியோர் கருணாநிதியை வாழ்த்திப் பேசினர். பின்னர் கருணாநிதிசிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்,
மே திங்கள் சட்டமன்றத்திலே ஆளுநர் உரையாற்றியபோது, அந்த உரையின்அச்சடிக்கப்பட்ட புத்தகத்திலேயே, இந்தத் திங்கள், இந்த நாளில், இதே இடத்தில்சிவாஜியினுடைய சிலை வைக்கப்படும் என உரையிலே குறிப்பிடப்பட்டு உலகுக்கும்அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டோம். இடத்தைப் பார்வையிட்டோம்.ஏடுகளுக்கும் செய்தி தந்தோம், ஏடுகளும் அந்தச் செய்தியை பெரிய அளவிலேவெளியிட்டன. அதுவரையிலே வராத எதிர்ப்பு சொல்லாமல் வந்த சுனாமியைப்போல வந்தது.
சிலை வைப்பதற்குத் தடையா, தடங்கலா என்ற அந்தக் கேள்வி தமிழகம் முழுவதும்எதிரொலித்தது. என்ன செய்யப் போகிறான் கருணாநிதி என்கிற கேள்வி இரக்கஉணர்வோடும், ஏளனப் புன்னகையோடும் எழுந்தன.
ஆனால் நான் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லவில்லை, மெளனம் காத்தேன்.நீதிமன்றத்திற்கு இப்பிரச்சினை சென்றது. ஏற்கனவே இருந்த அரசு இது போன்றசாலைகளில் சிலை வைப்பதில்லை என்ற உறுதிமொழியை உச்சநீதிமன்றத்திலேகொடுத்திருக்கிறது.
எனவே நாங்கள் சிலை நாட்ட, விழா நடத்த அனுமதிக்கிறோம் என்றாலும், அதைஉச்சநீதிமன்றத்தில் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள் என்று உயர்நீதிமன்றம் தாக்கீதுகொடுத்து, விழாவை நடத்த அனுமதித்தது.நீதிக்கு தலைவணங்குகிற பண்பாட்டை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடித்துவருகின்றவர்கள் என்ற காரணத்தால், அந்த ஆணையை ஏற்று இன்று இந்த விழாவைஉங்களுடைய அன்பால், ஆதரவால், வாழ்த்து முழக்கத்தோடு நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்.
கடந்த அரசு, எந்த சிலையும் வைக்கப்படாது என்று உச்சநீதிமன்றத்தில் உறுதி மொழிகொடுத்த பின்னர்தான், சிவாஜி சிலைக்குப் பின்னால் இருக்கிற சிம்சன் கடிகாரகோபுரத்தை நிறுவியது.
அந்த ஆட்சிக்காலத்தில்தான் கிட்டத்தட்ட சிலை உயரத்தில் சிம்சன் கடிகாரத்தைநிறுவினர். இதையும் உச்சநீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லி, சிம்சன் கடிகாரத்தைக்காப்பாற்ற முடியுமானால், சிவாஜியையும் காப்பாற்ற முடியும் என்ற உறுதியைதருகிறேன்.
சிவாஜியோடு கொண்ட அந்த நட்பும், அன்பும், ஏதோ பார்த்தோம், பழகினோம், ஒரேஇலையில் அமர்ந்து சாப்பிட்டோம், இருவருக்கும் அவருடைய அன்னைதான்எனக்கும் அன்னை, என்னுடைய அன்னைதான் அவருக்கும் அன்னையாக,இருவருக்கும் ஒரு தாய்தான் என்ற அளவிலே பழகினோம் என்றாலும்,
இங்கே ரஜினி குறிப்பிட்டதைப் போல சிவாஜி ஏற்றுக் கொண்ட தலைவர் வேறு, நான்ஏற்றுக் கொண்ட தலைவர் வேறு, எனது கொள்கை வேறு, அவருடைய கொள்கைவேறு என்றாலும், நாங்கள் இருவரும் ஒரே இதயத்துக்குத்தான் சொந்தக்காரராகளாகஇருந்தோம்.
அந்த நட்புக்குத்தான் இன்று வெற்றி கிடைத்திருக்கிறது. என்னுடைய தங்கை கமலாஇங்கே வந்திருக்கின்றார். நான் அவர்களைக் காணுகின்றேன், கண் கலங்ககாணுகின்றேன்.
அவருடைய திருமணத்திற்கு மணமகனின் தோழனாக, சுவாமிமலை வரை சென்று,அங்கே நடைபெற்ற திருமணம், திருக்குறள் பாடி நடந்த திருமணம், அந்தத்திருமணத்திலே, அன்றைய இளம் வயதில், சிவாஜிக்கு வாழ்த்து கூறி, அன்று கண்டஅந்த மணமகளை, அவர்களை இன்றைக்கு இங்கே நான் காணுகின்றேன்.
அதற்குப் பிறகு எத்தனையோ நிகழ்ச்சிகள், அரசியலில், கலையுலகில், ஆனால்எங்களுடைய நட்பில் எந்த நகழ்ச்சியும் எங்களுக்கு இடறவில்லை. எங்கள் நட்புதழைக்க எல்லாமே எருவாகப் பயன்பட்டதே தவிர, எதுவும் இடையூறாகஅமையவில்லை என்றார் கருணாநதி.
நிகழச்சியின் டிவில் திரையுலகம் சார்பில் சிவாஜி உருவம் பொறிக்கப்பட்டபிரமாண்ட தஞ்சாவூர்த் தட்டை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த்,ஆகியோர் கருணாநிதிக்கு வழங்கினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications