மருத்துவமனையில் பெண் கொலை: மகளே கொன்ற கொடூரம்!
சேலம்:
சேலம் தனியார் மருத்துவமனையில் பெண் நோயாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மகளைபோலீஸார் கைது செய்துள்ளனர். தனது கள்ளக் காதலை தாயார் கண்டித்ததால், மகளே கொடூரமாக கொலைசெய்துள்ளார்.
சேலம் குமரன் தெருவைச் சேர்ந்தவர் பழனியப்பன். அவரது மனைவி ராஜம். 61 வயதாகும் ராஜத்தின் முதுகில்கட்டி இருந்தது. இதை சரி செய்வதற்காக 2வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவர்அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு அவருக்கு கடந்த வியாழக்கிழமை இரவு அறுவைச் சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் அவர் ஓய்வில்இருந்தார். அடுத்த நாள் அதிகாலையில், ராஜம் படுகொலை செய்யப்பட்டார். அடையாளம் தெரியாத யாரோஉள்ளே புகுந்து தனது தாயைக் கொன்று விட்டதாக ராஜத்துடன் தங்கியிருந்த அவரது மகள் ராணியும், ராஜத்தின்மூத்த மகள் சாந்தியின் மகள் செல்வலட்சுமியும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
தனது தாயைக் கொன்றவர்கள், தன்னையும் கத்தியால் குத்தியதாக ராணி போலீஸாரிடம் தெரிவித்தார். அவரதுகழுத்தில் லேசான காயம் காணப்பட்டது. இந்த நிலையில் வழக்கைப் பதிவு செய்த போலீஸார் ராணியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், போலீஸ் மோப்ப நாய் ராணியை வந்து கவ்விப் பிடித்தது. அவரையே சுற்றிச் சுற்றி வந்தது.இதனால் போலீஸாருக்கு ராணி மீது சந்தேகம் வலுத்தது. அவரை தீவிரமாக விசாரித்தபோது அவர்தான்குற்றவாளி என்பது தெரிய வந்து போலீஸார் திடுக்கிட்டனர்.
மேலும், கொலை செய்யப்பட்ட கத்தியிலும் ராணியின் கைரேகையே பதிவாகியிருந்தது. இதையடுத்து ராணியைபோலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது ராணி தெரிவித்த தகவல்கள்:
எனது கணவர் மாணிக்கம். தோப்பூரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். எனக்கும், சிலருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இதன் மூலம் எனக்கு நிறைய பணம் கிடைக்கும்.
அதை எனது தாயிடம்தான் கொடுத்து வைத்திருந்தேன். எனது கணவருக்குத் தெரியாமல்தான் பலரிடம் பழகிவந்தேன். ஆனால் இது எனது தாயாருக்குத் தெரியும். அவர் சேலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வரும்போதெல்லாம்என்னைக் கண்டிப்பார். இப்பழக்கத்தை விட்டு விடுமாறு கூறுவார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையேஅடிக்கடி தகராறு வரும்.
இந்த நிலையில்தான் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். அன்று இரவு நானும், எனது அக்காள் மகள் செல்வலட்சுமியும் எனது தாயாருடன் இரவுதங்கியிருந்தோம். அப்போது நான் கொடுத்து வைத்திருந்த பணம் குறித்து எனது தாயாருடன் கேட்டேன்.
அதற்கு அவர் ஒழுங்காக சம்பாதித்த பணமா அது, கேட்டவுடன் தூக்கிக் கொடுக்க என்று கோபமாக கேட்டார்.இதனால் நான் கொதிப்படைந்தேன். எனது அக்காள் மகள் முன்பு எனது தாயார் என்னை கேவலப்படுத்துவதுபோல பேசியதால் நான் ஆத்திரமடைந்தேன்.
அன்று இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கத்தியால் கழுத்தில் குத்திக் கொலை செய்தேன். சப்தம் கேட்டுஎழுந்த செல்வலட்சுமியிடம், இதை வெளியில் சொன்னால் உன்னையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினேன்.பின்னர் இருவரும் சேர்ந்து யாரோ கொலை செய்தது போல நாடகமாடினோம் என்று கூறியுள்ளார் ராணி.
இதையடுத்து போலீஸார் ராணியை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மகளிர் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications