சிறுதாவூர் விவகாரம் குறித்து விசாரணை: கருணாநிதி
சென்னை:
சிறுதாவூரில் தலித் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். தலித் மக்கள்பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் சனிக்கிழமை மாலைநடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறுதாவூர் தலித் நில பிரச்சினை தொடர்பாகநேரடியாக என்னிடம் புகார் எதுவும் வரவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள், தலித் கட்சிகள் தினசரி அறிக்கை விட்டுக்கொண்டுள்ளன.முழு விவரங்களையும் தருமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். அவர்கள் விசாரித்துக் கொண்டுள்ளனர். விவரம் கிடைத்தபிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளபடியே நிலத்தைப் பறி கொடுத்திருப்பார்களேயானால், அப்படிப் பறிகொடுத்தவர்களுக்கு அந்த நிலம் மீண்டும் கிடைக்கிறபடியாக நடவடிக்கை இருக்கும்.
தமிழக மக்களின் நாடித் துடிப்பாகவும், சகல பிரிவு மக்களுக்கு மாமருந்தாகவும், நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தபட்ஜெட் அமைந்துள்ளது என்றார் கருணாநிதி.
சிறுதாவூர் பங்களா: ஜெ. புது விளக்கம்
இதற்கிடைகயில் சிறுதாவூரில் தானும், தோழி சசிகலாவும் தங்கியுள்ள பங்களா தங்களுக்குச் சொந்தமானதல்ல, வாடைக்குத்தான் அந்த பங்களாவைஎடுத்துள்ளோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஊழலற்ற மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட ஒரு ஆட்சியை நான் கொடுத்தேன்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக மைனாரிட்டி அரசு, என் மீது பழி சுமத்தவும், என்னைப் பழிவாங்கவும் ஏதாவது பிரச்சினைகிடைக்காதா என்று தோண்டிப் பார்த்தும் எதுவும் கிடைக்காததால், வேண்டும் என்றே சிறுதாவூர் பங்களா குறித்து கற்பனையைக் கதையைஉருவாக்கி பொய்யான குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளது.
நானும், எனது தோழி சசிகலாவும் சிறுதாவூர் பங்களாவில் சில மாதங்கள் தங்கியிருந்ததால், எனக்கோ அல்லது சசிகலாவுக்கோ இந்த பங்களாசொந்தமானதாக இருக்கும் என்ற கற்பனைக் குற்றச்சாட்டை திமுக தரப்பி பரப்பி வருகிறது.
சிறுதாவூரில் பங்களா வாடகைக்கு விடப்படுகிறது என்று பத்திரிக்கைகளில் வந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான் அந்த பங்களாவை வாடகைக்குஎடுத்தோம். அவ்வப்போது அங்கு சென்று தங்குவோம். ஆனால் தலித் சமூக்ததினரை மிரட்டி, பங்களாவுக்கு அருகே உள்ள இடத்தை ஆக்கிரமித்ததாககூறப்படும் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை.
இதுதொடர்பாக திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும், ஆதரவு டிவியும், பத்திரிகைகளும் பொய்யான செய்திகளை கொடுத்து வருகின்றன. என் மீதுபழி போடவும், நற்பெயரை களங்கப்படுத்தவும் இந்த பொய்யான குற்றச்சாட்டை திமுகவின் தூண்டுதலின் பேரில் பரபபி வருகிறார்கள்.
இவற்றை சட்டரீதியாக சந்தித்து உண்மையை நிலை நாட்டுவேன். வரதராஜன் போன்ற தலைவர்கள் கூட திமுகவின் இந்த பொய்ப் பிரசாரத்தை நம்பிபொய்க் குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், இல்லாத பிரச்சினையைக் கிளப்பி, கூட்டணிக் கட்சியினரை இதுகுறித்துப் பேச வைத்து எனக்குதர்மசங்கடம் கொடுக்க கருணாநிதி நினைக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications