குண்டுவெடிப்பு சதி: உஷார் நிலையில் கோவை
கோவை:
கோவையை தகர்க்க தீவிரவாதிகள் போட்டிருந்த சதி முறியடிக்கப்பட்டு, 5தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளதைத் தொடர்ந்து கோவை நகரில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை நகரின் அனைத்த நுழைவாயில்களிலும் தீவிரவாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கோவை குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் ரோந்துப் பணியில்ஈடுபட்டிருந்தபோது ஹாரூண் பாஷா, அவரது தம்பி மானிக் பாஷா ஆகியோர்சிக்கினர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, கோவையை குண்டுவைத்துத் தகர்க்க திட்டமிட்டிருந்த பெரிய சதிச் செயல் தெரிய வந்து போலீஸார்அதிர்ந்தனர்.இதையடுத்து அவர்களது கூட்டாளிகள் தங்கியிருந்த வீட்டை போலீஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். அங்கு போலீஸார் அதிரடியாக நுழைந்து அங்கிருந்ததிப்பு சுல்தான், போலோ சங்கர் என்ற ரஹ்மான் ஆகியோரை போலீஸார் பிடித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்சுதீன் என்பவரையும் போலீஸார் கைதுசெய்தனர். இந்த ஐந்து பேரிடம் போலீஸார் துருவித் துருவி நடத்திய விசாரணையில்அவர்கள் போட்டிருந்த பயங்கர சதித் திட்டம் தெரிய வந்தது.
கோவையின் முக்கிய இடங்களான அரசு மருத்துவமனை, ஆட்சித் தலைவர்அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட மொத்தம் 8 இடங்களில் சக்தி வாய்ந்தவெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த அவர்கள்திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக கணபதி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.அவர்களிடமிருந்து ஏராளமான வெடிகுண்டுகள், வெடிமருந்து உள்ளிட்டவற்றைபோலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கோவை நகரின் வரைபடம்அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் கும்பல் பிடிபட்டதைத் தொடர்ந்து கோவை நகரில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டது. கோவை நகருக்குள் வரும் எல்லைப் பகுதிகள் தீவிரகண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. வாகனச் சோதனையில் போலீஸார்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோவைமாவட்டம் மற்றும் கேரள எல்லையில் தீவிரக் கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்என்பதால், கேரளாவில் உள்ள தீவிரவாதிக் கும்பலுடன் இவர்களுக்குத் தொடர்புஇருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. பிடிபட்டவர்கள் குறித்து மாநகரகாவல்துறை ஆணையர் கரண் சின்ஹா கூறுகையில், மனித நீதி பாசறை என்றஅமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் தற்போது பிடிபட்டுள்ளனர். இவர்களில் ஹாரூண்பாஷா, கோவை தொடர் குண்டுவெடிப்பில் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டவர்என்று தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.இதற்கிடையே, இக்கும்பல் முக்கிய இடங்களில் ஏற்கனவே வெடிகுண்டுகளைவைத்திருக்க் கூடும் என்ற சந்தேகத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கியஇடங்களில் போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சோதனைநடத்தினர். இருப்பினும் குண்டு எதுவும் சிக்கவில்லை.
பெரும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டு, தீவிரவாதக் கும்பல் பிடிபட்டுள்ளதால்கோவை போலீஸார் அதிகபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications