இலங்கையில் போர் பீதி அதிகரிப்பு: ரணில் விக்கிரமசிங்கே
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையில் போர் பதட்டம் அதிகரித்து வருகிறது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேகூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்கே டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்,வெளியுறவுத்துறை இணை அமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதையடுத்து கொழும்பு திரும்பும் வழியில் இன்று காலை சென்னை வந்த அவர் விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைப் பிரச்சினைக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது என்று இந்தியத்தலைவர்கள் வலியுறுத்தினர்.
அரசியல் ரீதியான தீர்வே பொருத்தமான வழி என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனது கருத்தும் இதுதான்.இலங்கையில் தற்போது நிலைமை சரி இல்லை. போர் பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார்விக்கிரமசிங்கே.












Click it and Unblock the Notifications