புரளி கிளப்பினால் செல்போன் இணைப்பு கட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செல்போன்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், அந்த செல்போன் எண்ணின் இணைப்பு துண்டிக்கப்படும் எனசென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
சமீப காலமாக சென்னை நகரில் சரமாரியாக வெடிகுண்டு புரளிகள் கிளம்பி காவல்துறையை நிலை குலைய வைத்துவருகின்றனர். அங்கே குண்டு இருக்கிறது, இங்கே குண்டு இருக்கிறது என சகட்டு மேனிக்கு புரளியைக் கிளப்பி விடுவோரால்,போலீஸார் பெரும் தலைவலிக்கு ஆளாகியுள்ளனர்.இதுபோன்ற புரளி கிளப்பி விடும் நபர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, செல்போன்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுப்போரின் இணைப்பைத் துண்டிக்க காவல்துறை முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர கால்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்ல, செல்போன் மூலமாகவோ,எஸ்.எம்.எஸ். மூலமாகவோ, யாராவது வெடிகுண்டு புரளியைக் கிளப்பினால், எந்த செல்போனிலிருந்து அந்த செய்தி, மிரட்டல்வருகிறதோ, அந்த எண்ணைக் கண்டுபிடித்து அதன் இணைப்பைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பான எஸ்.எம்.எஸ். செய்தியும், அனைத்து செல்போன் வாடிக்கையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications