சிறுதாவூர் பங்களா: ஜெ. புது விளக்கம்
சென்னை:
சிறுதாவூரில் தானும், தோழி சசிகலாவும் தங்கியுள்ள பங்களா தங்களுக்குச் சொந்தமானதல்ல, வாடைக்குத்தான்அந்த பங்களாவை எடுத்துள்ளோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஊழலற்ற மக்கள் நலனைக்கருத்தில் கொண்ட ஒரு ஆட்சியை நான் கொடுத்தேன்.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக மைனாரிட்டி அரசு, என் மீது பழி சுமத்தவும்,என்னைப் பழிவாங்கவும் ஏதாவது பிரச்சினை கிடைக்காதா என்று தோண்டிப் பார்த்தும் எதுவும் கிடைக்காததால்,வேண்டும் என்றே சிறுதாவூர் பங்களா குறித்து கற்பனையைக் கதையை உருவாக்கி பொய்யான குற்றச்சாட்டைக்கிளப்பியுள்ளது.
நானும், எனது தோழி சசிகலாவும் சிறுதாவூர் பங்களாவில் சில மாதங்கள் தங்கியிருந்ததால், எனக்கோ அல்லதுசசிகலாவுக்கோ இந்த பங்களா சொந்தமானதாக இருக்கும் என்ற கற்பனைக் குற்றச்சாட்டை திமுக தரப்பி பரப்பிவருகிறது.
சிறுதாவூரில் பங்களா வாடகைக்கு விடப்படுகிறது என்று பத்திரிக்கைகளில் வந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான்அந்த பங்களாவை வாடகைக்கு எடுத்தோம். அவ்வப்போது அங்கு சென்று தங்குவோம். ஆனால் தலித்சமூக்ததினரை மிரட்டி, பங்களாவுக்கு அருகே உள்ள இடத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில்துளியும் உண்மை இல்லை.
இதுதொடர்பாக திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும், ஆதரவு டிவியும், பத்திரிகைகளும் பொய்யானசெய்திகளை கொடுத்து வருகின்றன. என் மீது பழி போடவும், நற்பெயரை களங்கப்படுத்தவும் இந்த பொய்யானகுற்றச்சாட்டை திமுகவின் தூண்டுதலின் பேரில் பரபபி வருகிறார்கள்.
இவற்றை சட்டரீதியாக சந்தித்து உண்மையை நிலை நாட்டுவேன். வரதராஜன் போன்ற தலைவர்கள் கூடதிமுகவின் இந்த பொய்ப் பிரசாரத்தை நம்பி பொய்க் குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், இல்லாத பிரச்சினையைக் கிளப்பி, கூட்டணிக்கட்சியினரை இதுகுறித்துப் பேச வைத்து எனக்கு தர்மசங்கடம் கொடுக்க கருணாநிதி நினைக்கிறார். ஆனால்இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications