கேரளாவில் தீப்பிடித்து எரிந்த தமிழக பஸ்: டிரைவர், கிளீனர் பலி
கோழிக்கோடு:
கோவையிலிருந்து கேரளாவுக்குச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில்பேருந்தின் ஓட்டுநரும், கிளீனிரும் உடல் கருகி இறந்தனர்.
கோவையைச் சேர்ந்த சிட்டி டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் பேருந்து, சனிக்கிழமைஇரவு கோழிக்கோடுக்குச் சென்றது. நேற்று காலை பயணிகளை இறக்கி விட்டதும், பேருந்தை கண்ணனூரில் ஒருஇடத்தில் நிறுத்தி விட்டு ஓட்டுநர் சின்னச்சாமி, கிளீனர் சந்தோஷ் ஆகியோர் பேருந்துக்குள் படுத்துத் தூங்கினர்.அப்போது திடீரென ஆம்னி பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது.பேருந்து தீப்பிடித்து எரிவதைப் பார்த்ததும்அப்பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைக்க கடுமையாக முயன்றனர். தீயணைப்புப் படை வீரர்களுக்குத் தகவல்போய் அவர்களும் தீயை அணைக்கப் போராடினர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது.அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து விட்டது.
பேருந்துக்குள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநரும், கிளீனரும் பரிதாபாக உயிரிழந்திருந்தனர். பேருந்தின்பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் நாசவேலை காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications