காமராஜர் ஆட்சி அமையவேண்டும்: இளங்கோவன்
செங்கல்பட்டு:
தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமையவேண்டும் என்று மத்திய அமைச்சர்இளங்கோவன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் காமராஜர் 104வது பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாவது,இன்று அடிதட்டு மக்கள், ஏழை, எளியவர்கள் மேல் நாடுகளுக்கு சென்று மேல்படிப்புபடித்து கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்?, காமராஜர்தான். தமிழகத்தில் முதல் முதலில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர்காமராஜர் தான்.
அவர் கட்டிய பள்ளிக்கூடங்கள், கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தினால் ஏழை,எளிய மாணவர்கள் கல்வி கற்க முடிந்தது. காங்கிரஸ் ஆட்சியைப் பற்றி யார் யாரோஎப்படியெல்லாமோ கொச்சைபடுத்தி பேசினார்கள். சோனியா பிரதமரானால்மொட்டை அடிப்பேன், வெள்ளை சேலை கட்டுவேன் என்றெல்லாம் பேசினார்கள்.
ஆனால் சோனியா காந்தியே வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின் சோனியா காந்திதந்த பதில் என்னவென்றால் என்னால் இந்நாட்டில் பெருமைகளும், கலாசாரமும்கொட்டுவிடக்கூடாது என்று அவருக்குப்பதிலாக மன்மோகன் சிங்கைபிரதமராக்கினார்.
இந்நாட்டிற்காக தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல் பாடுபட்டவர் சோனியா காந்தி.நாட்டுக்காக அவரது குடும்பம், பட்டபாடு கொஞ்சமில்லை. கட்டிய கணவரைஇழந்தார். மாமியார் இந்திரா காந்தியை இழந்தார். அவர் குடும்பமே உயிர் தியாகம்செய்தது.
இந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு செய்தது ஏராளம். சேது சமுத்திரதிட்டம் கொண்டு வந்துள்ளது. சுனாமி நேரத்தில் மக்களுக்கு தகுந்த பாதுகாப்புவழங்கியது. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி அமைய வேண்டுமானால் மீண்டும் காமராஜர் ஆட்சிஇங்கு அமைய வேண்டும் . தற்போது கருணாநிதி அறிவித்த பட்ஜெட் மிகச்சிறந்தபட்ஜெட். எழை, எளிய மக்களுக்கு நல்ல காரியங்களை செய்துள்ளார். குறிப்பாககிராமப்புற மக்களுக்கு இது நல்ல பயனுள்ளதாக இருக்கும்.
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகைகள் வழங்கி அவர்களின் நீண்ட நாள்கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார். துணி நூல்களுக்கான வரியை ரத்துசெய்ததற்கு ஜவுளித்துறை அமைச்சர் என்ற முறையில் நான் கருணாநிதிக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications