கருணாநிதி சொந்த பந்தங்களின் சொத்து விவரம் கேட்கிறார் ஜெ!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எனக்குச் சம்பந்தம் இல்லாத சிறுதாவூர் பங்களா குறித்து கேள்வி கேட்கும் கருணாநிதி,தனது மற்றும் தனது சொந்த, பந்தங்களின் சொத்து விவரங்களை பகிரங்கமாகவெளியிடத் தயாரா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.

சிறுதாவூரில் தலித் நிலங்களை சசியின் ஆட்கள் ஸ்வாஹா செய்ததாக மார்க்சிஸ்ட்கட்சி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த நிலம் தனக்கு சொந்தமில்லை எனஜெயலலிதா கூறியுள்ளார். அதில் உள்ள பங்களாவில் வாடகைக்கு இருந்ததாகக்கூறியுள்ளார்.

வாடகைக்கு இருந்தால் அந்த பங்களாவுக்கு சாலைகளை அரசு செலவில் போட்டதுஏன் என்றும், பங்களா யாருக்கு சொந்தம் என்றும் கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இந் நிலையில் இன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், சிறுதாவூரில் பங்களாகாலியாக இருப்பதாக 2004ம் ஆண்டு ஹிந்து நாளிதழ் உள்ளிட்ட பல நாளிதழ்களில்விளம்பரம் வந்ததைப் பார்த்து காசோலை மூலம் பணம் கொடுத்து அந்த பங்களாவில்நான் சில காலம் தங்கியிருந்தேன்.

நான் கொடுத்த பணம் அரசுப் பணம் அல்ல. அரசுப் பணத்தை எடுத்து அனுபவிப்பதுகருணாநிதிக்குக் கை வந்த கலையாக இருக்கலாம். ஆனால் எனக்கு அந்தப் பழக்கம்இல்லை.

சிறுதாவூர் பங்களா குறித்து யார் யார் மூலமாகவோ நாடகமாடிப் பார்த்த கருணாநிதிஅது சரிப்பட்டு வராததால், தானே முன்வந்து சில கேள்விகளைக் கேட்டுள்ளார்.எனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு சொத்து குறித்து கேள்வி கேட்கும் கருணாநிதி,தனது சொந்த பந்தங்களின் அசையும், அசையாச் சொத்துக்களின் பட்டியலைபகிரங்கமாக வெளியிடத் தயாரா என்பதை விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

ஜெ. புது விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை முழு விவரம்:

சிறுதாவூரில் நானோ சசிகலாவோ தலித் சமூகத்தினரை மிரட்டி, கட்டாயப்படுத்தி நிலத்தை ஆக்கிரமித்தாகவும், இதனால் தலித்துகள் போராட்டம்நடத்துகிறார்கள் என்றும், தலித்துகள் வேலிகளைப் பிடுங்கி எறிந்தார்கள் என்றெல்லாம் கூறப்படுவதில் துளியும் உண்மை இல்லை.

இவைகளெல்லாம் கற்பனைக் குற்றச்சாட்டுகளே ஆகும். நிலத்தை பற்றி பிரச்னை ஏதாவது இருந்தால் அதை அந்த இடத்தின் உரிமையாளரிடம் தான்கேட்க வேண்டுமே தவிர, எனக்கும் சசிகலாவுக்கும் இதைப்பற்றி எதுவும் தெரியாது.

எங்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நானோ, சசிகலாவோ, தலித்துகளை மிரட்டி அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதாககூறப்படும் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை.

சிறுதாவூரைச் சேர்ந்த பொது மக்கள் இது குறித்து பேட்டி அளித்ததாக டிவியில் சில நாட்களுக்கு முன்பு இது குறித்த காட்சிகள் காண்பிக்கப்பட்டன.இதனையடுத்து சிறுதாவூர் மக்கள் பிரதிநிதிகள் சென்னைக்கு வந்து என்னுடைய போயஸ் கார்டன் இல்லத்தில் என்னை சந்தித்துப் பேசினார்கள்.

அவர்கள் கூறியதாவது, டிவியில் வருகின்ற செய்திகளைப் பார்த்து அம்மா தயவு செய்து வருத்தப்பட வேண்டாம். அத்தகைய எந்தப் பேட்டியையும் நாங்கள்கொடுக்கவில்லை. டிவியில் இருந்து வந்து எங்களிடம் இவ்வாறு குற்றம் சாட்டி பேட்டி கொடுங்கள் என்று வற்புறுத்திக் கேட்டார்கள். ஆனால் அப்படிஎதுவுமே நடைபெறாத போது. பொய் குற்றச்சாட்டுகளை நாங்கல் எப்படி கூற முடியும்? ஒரு சிறிய தொந்தரவு கூட எங்களுக்கு இல்லை.

மாறாக, இங்கே வந்து எங்கள் மத்தியில் தங்கியதை நாங்கள் அனைவரும் பெருமையாகக் கருதி மகிழ்ச்சியோடு வரவேற்போம். ஆகவே இத்தகையபேட்டியை கேட்டு எங்களிடம் வராதீர்கள் என்று விரட்டியடித்து விட்டோம்.

ஆனால் பின்னர் யாரோ சில பேரைப் பிடித்து அவர்களை பேட்டி கொடுக்க வைத்து அவர்கள் சிறுதாவூர் மக்கள் என்று குறிப்பிட்டு, டிவியில் இத்தகையபேட்டியைக் காண்பித்தார்கள். எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை.

சிறுதாவூர் மக்கள் யாரும் இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறவும் இல்லை. ஆகவே இதையெல்லாம் பொருட்படுத்தாமல், இதைப் பற்றிகவலைப்படாமல் மீண்டும சிறுதாவூருக்கு வந்து தங்க வேண்டும். நீங்கள் அங்கு வந்து எங்கள் மத்தியில் தங்குவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்என்று சிறுதாவூர் மக்கள் பிரதிநிதிகள் கூறிவிட்டு சென்றனர். இது தான் உண்மை.

சிறுதாவூர் மக்கள் பிரதிநிதிகள் என்னை சந்தித்து சென்று ஒரு வாரம் இருக்கும். ஆனால் ஆனால் தூண்டுதலின் பேரில் இதனை விடாமல் மேலும்மேலும் பெரிதாக்கப் பார்க்கிறார்கள். திமுகவினரே சில பேரை இதற்காக ஏற்பாடு செய்து போலி போராட்ட நாடகத்தை செய்து, அதை படம் பிடித்துஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறுதாவூர் பங்களா பக்கத்தில் வேறு யாருக்கோ சொந்தமான இடத்தில் சில பேர்களை கொண்டுவந்து இறக்கி, 22.7.2006 அன்று போலிபோராடட்டம் நடத்தச் செய்து அதை படம் பிடித்துக் கொண்டிருந்ததாக எனக்கு தாகவல் வந்துள்ளது.

அந்த டிவி குழுவினரே, இந்த இடம் சசிகலாவுக்கு சொந்தமானது என்று பொய்ப் பிரசாரம் செய்து கொண்டிருத்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தார்கள்.என் மீது பழிபோடவும், குற்றம் சாட்டவும், மக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயரை களங்கப்படுத்தவும் இந்த பொய்யான குற்றச்சாட்டைவேண்டுமென்றே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனை முறை சொன்னாலும் ஒரு பொய் உண்மையாகி விடாது. இத்தகைய பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறிய அனைவரின் மீதும் சட்டப்படியானநடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்ஜெட் கூட்டத் தொடரில் நான் கலந்து கொள்வதை கருணாநிதி விரும்பவில்லை. அதனால் தான் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குயுள்ள இந்தநேரத்தில், இல்லாத பிரச்சினையைக் கிளப்பி, கூட்டணிக் கட்சியினரை இதுகுறித்துப் பேச வைத்து எனக்கு தர்மசங்கடம் கொடுக்க கருணாநிதி நினைக்கிறார்.

ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+