பொதுக்கூட்ட மேடையில் திமுக-சிபிஎம் மோதல்!
சென்னை:
சென்னை விமான நிலையம் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தின்போது, திமுகவினருக்கும், மார்க்சிஸ்ட்கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததால் பெரும் பரபரப்புஏற்பட்டது.
சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக பொழிச்சலூர், பம்மல்,அனகாபுத்தூர் உள்ளிட்ட மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளை கையகப்படுத்தமத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.தினசரி அப்பகுதியில் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாகஅத்தனை அரசியல் கட்சிகளும் தனித் தனியாக போராடி வருகின்றன. யார் மக்களின்ஆதரவை பெறுவது என்பதில் கட்சிகளுக்கிடையே கடும் போட்டியும் நிலவிவருகிறது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொழிச்சலூரில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து கூட்டத்தில்கலந்து கொண்டவர்கள் பேசினர். தமிழ் மாநிலச் செயலாளர் வரதராஜனும் இந்தக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது, திடீரென பொழிச்சலூர் பஞ்சாயத்துத் தலைவர் ஞானமணி (திமுக)மேடையில் ஏறி அங்கு அமர்ந்திருந்த மார்க்சிஸ்ட் தலைவர்களுடன் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக திமுகவினர் திரண்டு வந்து கடும்வாக்குவாதத்தில் இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஒரே கூட்டணியில் உள்ள திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரிடையே இப்படி கடும்மோதல் ஏற்பட்டதை பொதுமக்களும் கூடி நின்று பரபரப்புடன் வேடிக்கை பார்த்தனர்.பின்னர் வரதராஜன் தலையிட்டு ஞானமணியையும் திமுகவினரையும்சமாதானப்படுத்தினார்.
இருப்பினும் ஞானமணி நீண்ட நேரமாக மேடையை விட்டு இறங்காமல் கடுமையாகபேசிக் கொண்டிருந்தார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம்குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போலீஸில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications