மதானியின் மனைவி சோபியா கோர்ட்டில் சரண்
கோவை:
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர்அப்துல் நாசர் மதானியின் மனைவி சோபியா இன்று கோவை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீனில் விடுதலைஆனார்.
அப்துல் நாசர் மதானி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக கடந்த 2002ம்ஆண்டு சிறைச்சாலைக்கு வந்தார் சோபியா. அப்போது அவரை போலீஸார் சோதனையிட முயன்றபோது கடும்எதிர்ப்பு தெரிவித்த சோபியா, போலீஸார் மீது செல்போனைத் தூக்கி எறிந்து தாக்க மயன்றார். பின்னர்அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.இதைத் தொடர்ந்து போலீஸாரைத் தாக்கியதாக சோபியா, நெளஷத் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்தவழக்கில் நெளஷத் கைது செய்யப்பட்டார். ஆனால் சோபியா தலைமறைவாக இருந்து வந்தார். இவ்வழக்கில்முன்ஜாமீன் வழங்குமாறு கோரி சோபியா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம்நிராகரித்து விட்டது.
இந் நிலையில் கோவை 3வது குற்றவியல் நீதிமன்றம் சோபியாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனால் அவர்கோவைக்கு வராமலேயே இருந்து வந்தார். இந்தச் சூழ்நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் கோவை வந்தசோபியா, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானியை சென்று பார்த்தார்.
பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள ஒருவர், சிறைச்சாலைக்குச் சென்று மதானியையும், மற்ற குண்டுவெடிப்புக்கைதிகளையும் பார்த்தது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
இந் நிலையில், சோபியா இன்று கோவை 3வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவரைநீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். கோர்ட் உத்தரவிட்டால் தவறாமல்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சோபியாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications