ஏ.சி. போட மாட்டேன், டீ குடிக்க மாட்டேன்எந்திரிச்சு நின்னு கும்பிடுவேன்!
சென்னை:
என்னை நடிகர் சங்க பொதுச் செயலாளராக்கினால் அறையில் ஏ.சி. போட மாட்டேன்,சங்க செலவில் காபி, டீ குடிக்க மாட்டேன், மூத்த கலைஞர்கள் வந்தால் எழுந்து நின்றுகும்பிடுவேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவிக்கு மன்சூர் அலிகான் போட்டியடுகிறார். தான்சங்க பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னவெல்லாம் செய்வேன்என்பதை பட்டியலிட்டுள்ளார் மன்சூர். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நடிகர்களுக்கு நன்மை செய்யத்தான் போட்டியிடுகிறேன். என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்தால், எனது அறையில் ஏ.சி. போட்டுக் கொள்ள மாட்டேன்.சங்கச் செலவில் டீ, காபி கூட குடிக்க மாட்டேன். சாப்பாடும் சாப்பிட மாட்டேன்.
மூத்த கலைஞர்கள் வந்தால் எழுந்து நின்று கும்பிடுவேன். தலைவர் சரத்குமாருடன்இணைந்து செயல்படுவேன். சரத்குமார் பொதுவானவராகி விட்டார்.
ராதாரவி 14 வருடங்களாக தலைவராக இருந்துள்ளார். அவர் இருந்தபோது சங்கக்கடன் ரூ. 35 லட்சமாகத்தான் இருந்தது. ஆனால் ஒழுங்காக வட்டி கட்டாததால், அதுரூ. 2 கோடியாக அதிகரித்து விட்டது. விஜயகாந்த் வந்துதான் அதை அடைத்தார்.
சங்கத்தில் கே.ஆர்.விஜயா, ஸ்ரீவித்யா, செந்தில், ஸ்ரீபிரியா, கார்த்திக் என மூத்தஉறுப்பினர்கள் இருக்கிறாரக்ள். ஆனால் அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகொடுக்காதது வருத்தம் தருகிறது.
சங்கத்தில் கிட்டத்தட்ட 600 தபால் ஓட்டுக்கள் உள்ளன. இவற்றை பெற பலதில்லுமுல்லு வேலைகள் நடந்து கொண்டுள்ளன. என்னுடன் போனில் பேசிய ஒருநடிகர், தபால் ஓட்டுக்களை அனுப்புவதில் தில்லுமுல்லு நடப்பதாக கூறினார். அதைத்தடுக்க வேண்டும்.
அதேபோல தேர்தலின்போது கலவரம் நடத்தவும் சதி நடக்கிறது. ஓட்டுப்பதிவின்போது ஓட்டுச் சீட்டுக்களை கிழிக்கவும் திட்டமிட்டுள்ளனர். எனவே போலீஸ்பாதுகாப்புடன் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார் மகா வில்லன் மன்சூர்அலிகான்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications