ஊடுறுவ காத்திருக்கும் 1300 பாக் தீவிரவாதிகள்!
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ:
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுறுவ1,300 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக இந்திய ராணுவம்எச்சரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இன்று காலை ஊடுறுவ முயன்றதீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் கடும் சண்டை நடந்தது. இந்தசண்டையைத் தொடர்ந்து தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர். இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.இதற்கிடையே, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து பூஞ்ச், ரஜெளரி உள்ளிட்டபகுதிகளுக்குள் ஊடுறுவ பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் முயன்று வருவதாகபாதுகாப்புப் படையினர் எச்சரித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 1,300 தீவிரவாதிகள் ஊடுறுவ தயார் நலையில் இருப்பதாகவும் இந்தியபாதுகாப்புப் படையினரை திசை திருப்பும் வகையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்திஇவர்கள் காஷ்மீருக்குள் ஊடுறுவ பாகிஸ்தான் உதவக் கூடும் என்றும் பாதுகாப்புப்படையினர் கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முயற்சிகளை முறியடிக்க எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications