சட்டசபை: திமுக, அதிமுக மோதல்-கூச்சல்-அமளி
சென்னை:
சட்டசபையில் திமுக, அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. இதனால் அவையில் கூச்சல்,குழப்பம் ஏற்பட்டது.
பட்ஜெட் மீது சட்டசபையில் இன்று நடந்த விவாத விவரம்:அதிமுக எம்எல்ஏ சேகர் பாபு: சென்னை திமுகவின் கோட்டை என்று திமுகவினர் பறைசாற்றிக் கொண்டிருந்தனர்.ஆனால், அது அதிமுகவின் கோட்டை தான் என்று நிரூபித்துவிட்டார் புரட்சித் தலைவி. அவரது ஆட்சியில்தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்பட்டது. பல தீவிரவாத குழுக்களை வேரோடு வீழ்த்திய பெருமை புரட்சித்தலைவியையே சாரும்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஊன்று கோலாக இருப்பது காவல்துறை. அதை நவீனப்படுத்த பெரும் அளவில்நிதி ஒதுக்கியவர் புரட்சித் தலைவி. ஆனால், இந்த பட்ஜெட்டில் காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு வெறும் ரூ.68 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரான புரட்சித் தலைவிக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்துள்ளீர்கள். இதனால்அவருக்கு ஏதாவது தீங்கு ஏற்படுமானால் அதற்கு முழுப் பொறுப்பும் காவல்துறையை வகிக்கும் முதல்வரையேசாரும்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி (இடைமறித்து): கருணாநிதி எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது அவருக்குஎவ்வளவு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்பதை சேகர்பாபு போன்றவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.இப்போது அதைவிட 10 மடங்கு கூடுதலாகத் தான் எதிர்க் கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமானால் அதற்கு முதல்வரே பொறுப்பு என்று பழி சுமத்துவது சரியல்ல.எத்தனையோ பேருக்கு குடும்பத்தில் பிரச்சனை இருக்கலாம். அப்படி ஏதாவது நடந்துவிட்டால் அதற்கும்முதல்வரே பொறுப்பு என்று கூறவிடக் கூடாது.
சேகர்பாபு: கலர் டிவி யார், யாருக்கு வழங்கப்படும், எத்தனை பேருக்கு வழங்கப்படும், கலர் டிவி இல்லாதவீடுகள் கணக்கிடப்பட்டுள்ளதா?, என்ன அளவுகோளின்படி டிவி வழங்கப்படும் என்பது குறித்து பட்ஜெட்டில்ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதனால் இது மக்களை ஏமாற்றும் வேலையாகும் என்றார்.
இதற்கு திமுக உறுப்பினர்களும் அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து சேகர் பாபுவை கண்டித்துகோஷமிட்டனர். சேகர்பாபுவும் அதிமுகவினரும் சேர்ந்து பதிலுக்கு கோஷமிட அவையில் குழப்பம் நிலவியது.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: கலர் டிவி வழங்குவது தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி குழுவில் இடம்பெற அழைத்தபோது அதை அதிமுக புறக்கணித்தது. இப்போது வந்து கேள்வி ட்ேபது நியாயமல்ல.
சேகர்பாபு: பல கட்சிகளின் ஆதரவோ நடக்கும் இந்த மைனாரிட்டி ஆட்சியை தான் பட்ஜெட் பிரதிபலித்துள்ளது.பெரும்பாலான மக்கள் ஆதரவு புரட்சித் தலைவிக்கு மட்டுமே உண்டு. சில கட்சிகளின் ஆதரவோடு தான்கருணாநிதி முதல்வராக இருக்கிறார் என்றார்.
சேகர்பாபு இவ்வாறு கூறியதும் திமுக எம்எல்ஏக்கள் எழுந்து கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் கத்தஅவையில் மீண்டும் கூச்சல், குழப்பம் நிலவியது.
இதையடுத்து அனைவரையும் அமைதிப்படுத்திய சபாநாயகர், சேகர்பாபுவை தொடர்ந்து பேசஅனுமதிக்கவில்லை. மேலும் பேச சேகர்பாபு தொடர்ந்து அனுமதி கேட்டார். ஆனால், சபாநாயகர் அவருக்குஅனுமதி தரவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications