அதிக குழந்தைகள் பெறச் சொல்லும் ஆஸ்திரேலியா
கேன்பெர்ரா:
அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு ஆஸ்திரேலிய பெண்களுக்கு அந் நாட்டு அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.
அந் நாட்டு நிதித்துறை அமைச்சர் பீட்டர் காஸ்டெல்லோ இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியதம்பதிகள் கணவருக்காக ஒரு குழந்தையையும் மனைவிக்காக ஒரு குழந்தையையும் நாட்டுக்காக ஒருகுழந்தையையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இரு ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை வைத்து பரபரப்பைஏற்படுத்தினார்.இந் நிலையில் இப்போது மீண்டும் தனது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
ஆண்கள் அதிக அளவில் வீட்டில் தங்க வேண்டும். அப்போது தான் குழந்தை பிறப்பு வேகத்தை அதிகரிக்கமுடியும். அதிக குழந்தைகள் பெறுவது தான் ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்துக்கும் பொருளாதாரத்துக்கும்நல்லது.
கடந்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு 1.8 சதவீதமாக உயர்ந்தது. ஆனால், இது போதாது.
பிறப்பு வீதத்தை உயர்த்தாவிட்டால் 2042ல் ஆஸ்திரேலியாவில் 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 4மடங்காக உயர்ந்துவிடும். இள வயதினர் குறைந்து போய், நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்பட்டுவிடும்.
வேலை வாய்ப்புகளை பூர்த்தி செய்ய நம்மிடம் இளைய தலைமுறையினருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.
இப்போதைய பிறப்பு வீதத்தின்படி பார்த்தால் 2050ல் இத்தாலியின் மக்கள் தொகை 70 லட்சம் அளவுக்குக்குறையப் போகிறது. ஜப்பானின் மக்கள் தொகை 1.8 கோடியளவுக்குக் குறைந்துவிடும். ரஷ்ய மக்கள் தொலை3.1 கோடி குறையும்.
இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க அந்த நாடுகள் பல திட்டங்களை அமலாக்கி வருகின்றன.ஆஸ்திரேலியாவும் ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் 4,000 டாலர்களை தம்பதிக்கு பரிசாக வழங்கி வருகிறது.இது 2008ம் ஆண்டு முதல் 5,000 டாலராக உயர்த்தப்படும்.
வெளிநாட்டு பணியாளர்கள், அல்லது வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் மட்டுமேஆஸ்திரேலிய மக்கள் தொகை தட்டுப்பாட்டை நீக்கிவிட முடியாது. இதன்மூலம் ஆஸ்திரேலிய கலாச்சாரமும்வரலாறும் தான் மாறும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications