சென்னை விமான நிலையத்தை பீதியில் ஆழ்த்திய தொலைபேசி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த தொலைபேசியால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு அட்டைப்பெட்டி ரொம்ப நேரமாக கேட்பாரற்றுக் கிடந்தது. இதைப் பார்த்த சிலர் விமானநிலைய பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தந்தனர்.

இதையடுத்து விமான நிலையப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலகபாதுகாப்புப் படை வீரர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சென்று அட்டைப்பெட்டியைப் பரிசோதித்தனர்.

பலத்த முன்னேற்பாடுகளுடன் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில்ஒரு புத்தம் புதிய தொலைபேசி இருந்தது. வேறு எதுவும் அந்தப் பெட்டியில் இல்லை.

இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் அந்தமான் செல்லவிருந்த ஒரு பயணிவிமான நிலைய மேலாளரை அணுகி தான் கொண்டு வந்த பார்சலில் இடம்பெற்றிருந்த தொலைபேசிப் பெட்டியை தவற விட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து பெரும் பீதியை ஏற்படுத்திய தொலைபேசிப் பெட்டியை அதிகாரிகள்அந்த பயணியிடம் ஒப்படைத்துவிட்ட டோஸ் விட்டனர்.

இந்தப் பெட்டியால் விமான நிலையத்தில் பெரும் பீதி ஏற்பட்டுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+