கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை வாசகங்கள் அழிக்கப்படும்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோவிலிகளில் இனி தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற எழுதப்பட மாட்டாது. ஏற்கனவேஎழுதப்பட்டிருந்தாலும் அவை அழிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாமக எம்எஏ வேல்முருகன் பேசுகையில்,

தமிழகத்தில் கல்வியின் பெயரால் நடக்கும் கொள்ளையை தடுக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழிலும்வழக்காடும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். திரைப்படங்களில் ஆபாசம் அதிகரித்துவிட்டது.ஆபாசமான பாடல்களால் இளைய தலைமுறையினர் பாதிக்கப்படுகின்றனர்.

நான் ரெடி.. நீங்க ரெடியா போன்ற கொச்சயான பாடல்களும், தொலைக்காட்சிகளில் எஸ்எம்எஸ் மூலம்காதலர்களின் வாழ்த்துக்களும் இடம் பெறுவது நமது சமூக கலாச்சாத்தை சீரழிக்கிறது என்றார்.

அப்போது இடைமறித்த அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், திரைப்படங்களில் பாடல்களில் ஆபாச வரிகள்இடம் பெறுவதாக வேல்முருகன் குறிப்பிட்டார். அவரது கட்சியைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சராக உள்ளார்.அவர் மூலமாக தணிக்கை குழுவினரை அறிவுறுத்தி ஆபாசத்தை தடுக்கலாம். அதை விட்டுவிட்டு இங்கு பேசுவதுஎன்ன முறை? என்றார்.

மீண்டும் பேசிய வேல்முருகன், அது எனக்கும் தெரியும். கடந்த முறை நாங்கள் சபையில் இந்த பிரச்சனையைபேசும்போதும் முன்னாள் முதல்வர் (ஜெயலலிதா) இதையே தான் சொன்னார்.

கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற வாசங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்ப் பற்றுள்ளமுதல்வர் வாழும் காலத்தில் இந்த நிலையில் தமிழ் இருக்கக் கூடாது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருவாசகம்,தேவாரம் பாட முடியவில்லை. இதை எல்லாம் முதல்வர் தலையிட்டு தடுக்க வேண்டும் என்றார்.

அப்போது பதிலளித்த முதல்வர் கருணாநிதி,

சிதம்பரம் கோவிலில் தேவாரம், திருவாசரம், தமிழ்ப் பா இசைக்க முடியவில்லை என உறுப்பினர் இங்கேகுறிப்பிட்டார். சிதம்பரத்தை பொறுத்தவரை அங்கு தீட்சிதர்கள் ஆதிக்கத்தில் நடராஜர் இருப்பதாகவும், அதைமீறி யாரும் எதையும் செய்ய முடியாது என்ற ஐதீக கருத்து, அழுத்தம் திருத்தமாக இருப்பதாகக் கூறி தேவாரம்பாடிய ஒரு தமிழரை வெளியேற்றியிருக்கிறார்கள்.

அதில் சட்டப் பிரச்சனை குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் பேசி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்துக் கோவில் சுவர்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று எழுதப்பட்டுள்ளது. இதைப் பார்த்துஉண்மையான தமிழர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக அவர்களுக்கு கொந்தளிப்பு தான் ஏற்படுகிறது.

தமிழ் அவ்வளவு இலக்காரமாகப் போய்விட்டதா? தமிழ் உணர்வு அடிப்படையில் இந்த அரசின் சார்பில் இனிஎந்த ஆலயத்திலும் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற எழுதப்பட மாட்டாது. ஏற்கனவேஎழுதப்பட்டிருந்தாலும் அவை அழிக்கப்படும் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+