தாவூத் மகன் திருமணம்-தவறான படத்தால் சிக்கலில் சென்னை தொழிலதிபர்
சென்னை:
தாவூத் இப்ராகிம் மகனின் திருமண வரவேற்பு படம் என்று, சென்னை தொழில்அதிபரின் படம் வெளியாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால்தொழிலதிபர் போலீசில் புகார் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் தாவூத் இப்ராகிமின் மகனுக்கும், பாகிஸ்தான் முன்னாள்கிரிக்கெட் வீரர் மியான்தத் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது.பலத்த பாதுகாப்புடன், வெளியாட்களின் கேமராக்களுக்கு அனுமதியில்லாமல்நடந்தது அந்தத் திருமணம். ஆனால், அந்தத் திருமண நிகழ்ச்சியை ரகசியமாய் படம்எடுத்த சிலர் அதை வெளியிட்டு வருகின்றனர். இந்தப் படங்கள் தொடர்ந்து பலபத்திரிக்கைகளில் வெளியாகி வருகின்றன.
மணப்பெண் உடல் முழுவதும் ஜொலிக்கும் வகையில் நகைகளை அணிந்தவாறுமணமகனுடன் நிற்கும் ஒரு படமும் வெளியானது. அந்தப் படம் பெரும் சர்ச்சையைகிளப்பியுள்ளது.
மியான்தத் மகள்-தாவூத் மகனின் படம் என்ற பெயரில் வெளியானது, சென்னைகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இஜாஸ் அகமது-சபீதா ஆகியோரது புகைப்படம் ஆகும்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இஜாஸ் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்துபுகார் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, எங்களுக்கும், பத்திரிக்கையில் வெளியானபடத்துக்கும் சம்பந்தம் இல்லை. பாகிஸ்தான் தீவிரவாதிகளுடனோ, தாவூத்இப்ராகிமுடனோ எங்களுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் எங்களதுஉறவினரும் இல்லை.
எங்களுடைய புகைப்படத்தை தவறாக வெளியிட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவின் உள்ள சைபர் கிரைம்போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
நிருபர்களிடம் இஜாஸ் அகமது கூறியதாவது,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கிண்டில் உள்ள ஒரு தனியார் ஒட்டலில்எனக்கும், சபீதாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணம், மற்றும் வரவேற்புநிகழ்ச்சியில் 2,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
எங்கள் திருமண போட்டோ பத்திரிக்கைகளில் வெளியான படம் எப்படி வந்தது எனதெரியவில்லை. எனக்கும் தீவிரவாதிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.இதுபற்றி தீவிர விசாரணை நடத்த வேண்டும். தற்போது வெளியான புகைப்படத்தால்நாங்கள் செய்து வரும் துணிகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்குதொடர்பு இருப்பதாக கருதி எங்களுடைய துணி ஏற்றுமதிக்கான ஆர்டர் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
அதோடு நாங்கள் செய்து வரும் மற்ற பிஸினஸ்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். வெளியில் போகும் போது கூட தாவூத்இப்ராகியின் குடும்பத்தினர் என்று சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வுபோட்டோ வெளியிட்ட உண்மை குற்றவாளியை கண்டுபிடிப்பது தான் என்றார்.
இஜாஸ் அகமதுவின் தாய் கூறும்போது, இது எங்களது குடும்பத்துக்கு பெருத்தஅவமானமாக உள்ளது. உறவினர்கள் போன் செய்து கேட்கிறார்கள். அவர்களுக்குஎங்களை பற்றி தெரியும். தெரியாதவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.
இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. மும்பையில் எங்களுக்கு எந்தசொந்தபந்தமும் கிடையாது. அப்படியிருக்க ஏன் இப்படி போட்டோவை வெளியிட்டுஅவமானப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை என்றார் கவலையோடு.
இஜாஸ் அகமதுவின் தொழில் போட்டி காரணமாக யாராவது இவ்வாறு படத்தைவெளியிட்டிருக்கலாம் என்று சைபர் கிரைம் போலீசார் கருதுகின்றனர். விசாரணைநடக்கிறது.












Click it and Unblock the Notifications