ஜனனி கள்ள நோட்டு: ரூ. 80 லட்சத்தை ஒப்படைக்க கோரும் சிபிசிஐடி
மதுரை:
கஞ்சா வழக்கில் ஜனனியிடம் கைப்பற்றப்பட்ட ரூ. 1.4 கோடி பணத்தில் ரூ. 80லட்சத்தை தங்களிடம் ஒப்படைக்க கோரி சிபிசிஐடி போலீசார் மதுரை போதைபொருள் தடுப்பு சிறப்பு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜனனிடம் பிடிபட்ட ரூ.1.4 கோடி பணம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் டெபாசிட்செய்யப்பட்டது. பின்னது அது பேங்க் ஆப் பரோடாவில் பிக்சட் டெபாசிட்டில்போடப்பட்டது.ஜனனியிடம் பிடிபட்ட இந்த பணத்தில் ரூ. 30 லட்சம் அளவுக்கு கள்ளநோட்டுஇருந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தப் பணத்தை ஒப்படைக்க கோரி சிபிசிஐடி போலீசார் முதலில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி,பேங்க் ஆப் பரோடாவில் பிக்சட் டெபாசிட் ஆக போடப்பட்ட பணத்தை விடுவிக்கபோதை பொருள் தடுப்பு சிறப்பு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
அந்த உத்தரவை பெற்ற பின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பெயரில் பேங்க் ஆப்பரோடா, பாங்கர்ஸ் செக் தர வேண்டும். அந்த செக்கை பெற்று இந்தியன் ஓவர்சீஸ்வங்கி ரூ. 1.4 கோடியை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
பணத்தை பெற்ற பின் சிபிசிஐடி கூறுவது போல கள்ள நோட்டுக்கள் உள்ளனவா எனஅந்த நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும். கள்ள நோட்டு இருந்தால் அதற்கேற்பஉத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்தப் பணம் போதை பொருள் தடுப்பு சிறப்பு செஷன்ஸ்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந் நிலையில் சிபிசிஐடி டி.எஸ்.பி. தயாளன் தமிழ்செல்வன் போதை பொருள் தடுப்புசிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஜனனியிடம்கைப்பற்றப்பட்ட பணத்தில் கள்ளநோட்டு என சந்தேகிக்கப்படும் ரூ. 30 லட்சத்தைஎங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் கைப்பற்றப்பட்ட பணத்தில் புதிய நோட்டுகளாக இருக்கும் ரூ. 50லட்சத்தையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றிலும் கள்ள நோட்டுகளுக்குவாய்ப்புகள் இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications