கிருஷ்ணா நீர்-ஆந்திராவுக்கு தமிழகம் கோரிக்கை
சென்னை:
கிருஷ்ணா நதி நீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.
ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் திவான் 9 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவுடன் சென்னை வந்தார்.தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் திரிபாதியை அவர் சந்தித்து தெலுங்கு கங்கை நதி நீர்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.1983ம் ஆண்டு இரு மாநிலங்களுக்கும் இடையே கையெழுத்தான இத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்குஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா ஆற்று நீரை ஆந்திரா வழங்க வேண்டும்.
நீர் பங்கீடு குறித்தும், கால்வாய்கள் சீரமைப்பு குறித்தும் இரு மாநிலங்களுக்கும் இடையே பேச்சு நடத்தவும்,பிரச்சனைகளைக் களையவும் தலைமைச் செயலாளர்கள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால்,இந்தக் கமிட்டி கடந்த 4 வருடமாகக் கூடவே இல்லை.
கர்நாடகம் தவிர ஆந்திர அரசுடனும் அதிமுக அரசு மோதல் போக்கை கடைபிடித்ததால் இக் கூட்டமேநடக்கவில்லை.
இந் நிலையில் ஆந்திர-தமிழக குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது சென்னைக்கு தண்ணீர் வரும்கால்வாயில் ஆந்திர பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீர் செய்வது குறித்தும், சோமசிலா, கண்டலேறுஅணைகளில் தண்ணீர் தேக்கும் அளவை அதிகரிப்பது குறித்தும் இரு மாநில அதிகாரிகளும் ஆலோசனைநடத்தினர்.
சோமசிலா அணையின் உயரத்தை இப்போதைய 59 அடியிலிருந்து 78 அடியாக உயர்த்த ஆந்திரம் விரும்புகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications