சென்னை: பட்டப் பகலில் ரெளடிவெட்டி கொலை
சென்னை:
சென்னையில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டான்.
கீழ்ப்பாக்கம் ராணி அண்ணா நகரை சேர்ந்த முரளி என்ற வெள்ளை முரளி (40)அந்தப் பகுதியில் ரெளடித்தனத்துக்கு பேர் போனவன்.இவனுக்கும் மற்றொரு ரெடியான சுதாகருக்கும் அவ்வப்போது மோதல்ஏற்படுவதுண்டு. சுதாகரை கொலை செய்ய முரளி முயற்சித்தான். ஆனால், சுதாகர்
தப்பிவிட்டான்.இந் நிலையில் அந்தப் பகுதியில் கோவில் விழாவிற்கு நிதி வசூல் செய்ய நண்பருடன்சென்றான் முரளி.
கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள கிருஷ்ண பவன் ஓட்டலுக்கு அருகேஇருவரும் நடந்து சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் முரளியை வெட்டி சாய்த்தது.
அதில் அந்த இடத்திலேயே முரளி இறந்தான். கொலைக் கும்பல் தப்பியோடிவிட்டது.அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுதாகர் கோஷ்டி தான் முரளியைக் கொன்றதாகக் கருதப்படுகிறது.
இந்தக் கொலை குறித்து இணை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கூறுகையில்,
கொலை செய்யப் பட்ட முரளி, போலீஸ் பட்டியலில் மூன்றாம் தர ரெளடியாகஇருந்தார். அவர் மீது கொலை வழக்கும் உள்ளது. கடந்தாண்டு சுதாகர் என்றரெளடியை வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சுதாகர் தலைமையிலான கும்பல் தான் முரளியை வெட்டி கொலை செய்துள்ளதாகவிசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்என்றார்.
முரளியின் மனைவி திங்கலா கூறுகையில், போன வருடம் சுதாகர் என்பவர் மீதுகொலை முயற்சி நடந்தது. எனது கணவர் தான் சுதாகரை கொலை செய்யதிட்டமிட்டதாக அவர்கள் சந்தேகப்பட்டனர்.
இதனால் சுதாகர் கும்பல் எனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டது. இதையடுத்துஎன் கணவர் ஆந்திராவிற்கு சென்று பெயின்டர் தொழில் செய்து வந்தார்.
ஊரில் இருந்து வந்தவரை சுதாகர் கும்பல் தான் வெட்டி கொலை செய்துள்ளதுஎன்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications