மீனம்பாக்கம்-அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்துக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம்விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந் நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் 4ம் எண் நுழைவாயில்வழியாக ஒரு வாலிபர் சுவர் ஏறி குதித்து விமான ஒடுபாதையில் சுற்றிக்கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த மத்திய தொழிற்படை போலீசார் ஓடிச் சென்று அவரை மடக்கிபிடித்னர். பின்னர் அந்த வாலிபரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவருடைய பெயர் ராமச்சந்திரன் (19) என்பதும், திருத்தணியைசேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications