தீவிரவாதிகளுடன் தொடர்பு: 2 மத்திய படை வீரர்கள் கைது
ஜம்மூ:
லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 2 ராஷ்ட்ரீயரைபிள் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஷ்ட்ரீய ரைபிள் படை, மத்திய பாரா மிலிட்டரிப் படையாகும்.இந்திய விமானப்படையில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாகமுன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளரும், தற்போதைய தேசிய பாதுகாப்புஆலோசகருமான நாராயணன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் இதை மறுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அது தவறானதகவல் எனத் தெரிவித்தார்.
இந் நிலையில் தற்போது லஷ்கர்தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக கூறி 2 ராஷ்ட்ரீயரைபிள் படை வீரர்களை ஜம்மூ காஷ்மீர் மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் முகம்மது ஷகீல் மற்றும் அப்துல் ஹக் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. லஷ்கர் தீவிரவாதிகளுக்கு பல்வேறு வகையான உதவிகளைஇவர்கள் இருவரும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சிம் கார்டுகள், செல்போன்கள், பென்சில் பாம்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொடுத்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்கள் தவிர இன்னொரு ராஷ்ட்ரீய ரைபிள் வீரரிடமும் 2 போலீசாரிடமும்விசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications