பெங்களூர் கால் சென்டர் பெண் ஊழியர் கொலை- காதலனே கொன்றார்
பெங்களூர்:
பெங்களூர் கால் சென்டரில் பணியாற்றி வந்த 32 வயது பெண் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரைக் கொலை செய்த சக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
![]() |
இந் நிலையில் அதேபோல இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம்ஹாசன் அருகே உள்ள மாரனஹள்ளி, சிராடிகாட் என்ற இடத்தில் சாலையோரத்தில்உடல் முழுக்க 30 கத்திக் குத்துக் காயங்களுடன் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார்விரைந்து வந்து பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
அவர் அருகே கிடந்த கைப்பையை சோதனையிட்டபோது, அப்பெண்ணின் பெயர்தானியா பானர்ஜி (வயது 32) என்றும் பெங்களூர் குந்தனஹள்ளியில் உள்ள அவிவாநிறுவனத்தில் கால் சென்டர் பிரிவில் பணியாற்றி வந்தவர் என்பதும் அவரதுஅடையாள அட்டை மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து அவிவா நிறுவனத்துடன் போலீஸார் தொடர்பு கொண்டு விசாரணைநடத்தினர். இதில் தானியாவுக்கு மேற்கு வங்க மாநிலம் ஹெளராதான் சொந்த ஊர்என்பது தெரிய வந்தது.
பெங்களூர் பிரேசர் டவுன், நேதாஜி சாலையில் ஒரு வீட்டில் அனிதா சிங், ஷமீம்ஆகிய பெண்களுடன் பேயிங் கெஸ்டாக தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்தானியா.
செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணி வரையிலும் அலுவலகத்தில் பணியாற்றியதானியா, அதன் பிறகே கிளம்பிச் சென்றுள்ளார்.
ஆனால், அலுவலக வண்டியில் போகாமல் தனது பாய் பிரண்ட் குருராஜ் கிஷோர் (27)என்பவரின் காரில் சென்றுள்ளார். 3 நாட்களாகவே அலுவலக வாகனத்தைதவிர்த்துவிட்டு குருராஜின் காரில் தான் தானியா சென்றுள்ளார்.
இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு 11.30 மணியளவில் தானியாவுடன் வீட்டில்தங்கியுள்ள அனிதா சிங்குக்கு தானியாவின் செல்போனில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ்.வந்துள்ளது. அதில், நான் அவசரமாக கொல்கத்தா போகிறேன் என்று தானியாதெரிவித்துள்ளார்.
இதையடுத்து அனிதாவும், ஷமீமும் தானியாவுக்கு போன் செய்துள்ளனர். ஆனால்அவரது செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் குழப்பமடைந்த அவர்கள், தானியாவின் தோழி ஒருவரிடம் போன் செய்துகேட்டுள்ளனர். அதற்கு அவர், தானியாவும், அவருடன் வேலை பார்க்கும் கிஷோர்என்பவரும் சேர்ந்துதான் அலுவலகத்திலிருந்து சென்றதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கிஷோருக்கு அனிதா போன் செய்து பார்த்தார். அவரதுசெல்போனும் ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்தது.
புதன்கிழமை காலை 4 மணி வரை கிஷோர் தனது செல்போனை ஆஃப் செய்தேவைத்திருந்தார். 4 மணிக்கு மேல் அனிதா அவருக்கு போன் செய்தபோது,பதட்டத்துடன் அவர் பேசியுள்ளார்.
தானியா குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவர் வேறு ஒருவருடன் தான் சென்றார்என்று கூறியுள்ளார் கிஷோர்.
இந் நிலையில் குருராஜை இன்று போலீசார் கைது செய்து விசாரித்தபோது,தானியாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவிவா நிறுவனத்தில் பணிக்குசேரும் முன்னர் இருவரும் ஒரு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியதாகவும்அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
ஆனால், சமீப காலமாக தன்னை தானியா ஒதுக்க ஆரம்பித்ததால் அது தொடர்பாகஇருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், சம்பவம் நடந்த அன்று இரவும்இருவருக்கும் மோதல் ஏற்பட்டபோது கோபத்தில் தானியாவை குத்திக் கொலைசெய்ததாகவும் குருராஜ் போலீசாரிடம் கூறியுள்ளார்.
குறுகிய காலத்தில் கால் சென்டர் பெண் ஊழியர்கள் இருவர் கொலைசெய்யப்பட்டிருப்பது பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications