திருட்டு செல்போன்-மனைவியுடன் அரட்டை!
சென்னை:
திருடிய செல்போன் மூலம் மனைவியுடன் அரட்டை அடித்த வாலிபரை போலீஸார்கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், சிம்கார்டுகளை போலீஸார் பறிதல் செய்துள்ளனர்.
சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையிலிருந்து சிலநாட்களுக்கு முன்பு ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், ரீசார்ஜ் கார்டுகள்,சிம் கார்டுகள் திருடு போயின. கடையின் மேற் கூரையைப் பிய்த்து இவைதிருடப்பட்டன.இதுகுறித்து கடை உரிமையாளர் ஆழ்வார் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஆழ்வார் தனது சொந்த உபயோகத்திற்காக வைத்திருந்த ரூ. 10,000 டாக் டைம் உள்ளசெல்போனும் திருடு போயிருந்தது.
இதையடுத்து திருடப்பட்ட அந்த செல்போன்களில் இருந்து பேசப்பட்டும் எண்களைபோலீஸார் கண்காணித்தனர்.
அப்போது திருடப்பட்ட ஒரு போனிலிருந்து ஒரு குறிப்பிட்ட செல்போனுக்கு ஒரேநாளில் பத்து முறைக்கும் மேல் பேசப்பட்டது தெரிய வந்தது.
தொடர்பு கொள்ளப்பட்ட அந்த செல்போன் யாருடையது என்று போலீசார்விசாரித்தபோது ராஜசேகர் என்பவர் மாட்டினார்.
இவர் தான் செங்குன்றம் கடையில் செல்போன்களைத் திருடியவர் என்பதும் தெரியவந்தது.
தனது போனை மனைவியிடம் தந்துவிட்டு திருடிய போனில் இருந்து மனைவியுடன்அடிக்கடி பேசியுள்ளார்.
அவரிடமிருந்து செல்போன்கள், ரீசார்ஜ் கார்டுகள், சிம் கார்டுகளை போலீஸார்கைப்பற்றினர். ராஜசேகரும் கைது செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications