சிறையில் மதானிக்கு ஏன் விவிஐபி மரியாதை-பாஜக
சென்னை:
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு கைதியான, கேரளாவின் அப்துல் நாசர்மதானி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.
தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளகேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி, கோவை சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.தனது உடல் நலத்தைக் காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றுபலமுறை முயன்றும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந் நிலையில் சமீபத்தில்நடந்த தமிழக ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, கேரள முதல்வர் அச்சுதானந்தன்சென்னை வந்து மதானி மீது பரிவு காட்டுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கைவிடுத்தார்.
இதைப் பரிசீலிப்பதாக கருணாநிதி உறுதியளித்தார். அதன்படி முதல் கட்டமாகமதானிக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்போதுகோவை சிறைக்குள்ளேயே மதானிக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் மதானி சார்பில் உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், கடந்த 8 ஆண்டுகளாக நான் சிறையில் இருந்துவருகிறேன். இதன் காரணமாக எனது உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.தற்போது சிறைக்குள் எனக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுர்வதே சிகிச்சைபோதுமானதாக இல்லை.
ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால்தான் உரிய முறையில்சிகிச்சை தர முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனது செயற்கைக்கால்களையும் மாற்ற வேண்டிய நெருக்கடியில் நான் இருக்கிறேன். எனது கால்களைஉடனடியாக மாற்றிக் கொள்ளாவிட்டால் எனது நிலைமை மோசமாகி விடும் எனடாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் யாரும்எனக்கு எதிராக சாட்சி சொல்லவில்லை. எனவே என்னை ஜாமீனில் வெளியேவிடுவதால் வழக்கு விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார்மதானி.
இதற்கிடையே, 58 பேரின் உயிரைப் பறிக்க முக்கியக் காரணமாக இருந்த மதானிக்குதமிழக அரசும், கேரள அரசும் இவ்வளவு மரியாதை கொடுப்பது ஏன் என்று பாஜககேள்வி எழுப்பியுள்ளது.
நாடாளுமன்ற ராஜ்யசபாவில் மதானி தொடர்பாக பாஜக தலைவர் முரளி மனோகர்ஜோஷி பேசுகையில், 58 பேர் உயிர் போக காரணமாக இருந்த மதானிக்கு கோவைமத்திய சிறையில் விவிவிஐபி மரியாதை கொடுக்கப்பட்டு வருவதாக செய்திகள்வெளியாகின்றன.
சிறைக்குள்ளேயே அவருக்கு ஆயுர்வதே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும்,மதானியை விடுவிக்க கேரள கம்யூனிஸ்ட் ஆட்சி தீவிரமாக முயன்று வருவதாகவும்செய்திகள் வெளியாகின்றன. இந்த விஷயத்தில் கேரள அரசு இத்தனை தீவிரம்காட்டுவது ஏன்?
58 பேரின் உயிரைப் பறித்த ஒருவருக்காக தமிழக அரசும், கேரள அரசும் இந்தஅளவுக்கு பரிவும், மரியாதையும் காட்டுவது ஏன்? அப்படியானால் அந்த 58 பேரின்குடும்பங்களுக்கு இந்த அரசுகள் என்ன பதில் சொல்லப் போகின்றன என்றார் ஜோஷி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications