மோகனருவின் நடத்தை சரியில்லை-கேரள முதல்வர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு மோகனரு, அந்தப் பதவிக்குரியகண்ணியத்தைக் காக்கும் வகையில் நடந்து கொள்ளவில்லை. அவரது நடத்தைசரியில்லை என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கேரள முதல்வர்அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

கண்டரரு மோகனரு விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு மோகனரு தொடர்பான விவகாரம் குறித்துபோலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை நடந்த விசாரணையின்அடிப்படையில் பார்க்கும்போது, தந்திரி பதவிக்குரிய கண்ணியத்தை மோகனருகடைப்பிடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

அவரது பழக்க வழக்கங்கள், நடத்தை சரியில்லை. அவர் இதுபோல நடந்துகொண்டிருக்கக் கூடாது. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர் என்றார்.

இதற்கிடையே, தன் மீதான புகார்களை கண்டரரு மோகனரு மறுத்துள்ளார். சபரிமலைகோவிலில் தேவ பிரசன்னம் பார்ப்பது (உன்னிகிருஷ்ண பணிக்கர் தான் பிரசன்னம்பார்த்தார்) தொடர்பான சர்ச்சையின் எதிரொலியாக தனக்கு எதிராக சதித் திட்டம்தீட்டப்பட்டு தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

என்னைப் பதவியிலிருந்து நீக்க தலைமை தந்திரிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.தேவசம் போர்டு இதில் தலையிட முடியாது. உண்மையில் கணவனை இழந்தசாந்தாவுக்கு (விபச்சாரப் பெண்) நான் உதவிகள் மட்டுமே செய்து வந்தேன்.இதுதொடர்பாகத்தான் நான் அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன்.

அப்போது சிலர் என்னை வலுக்கட்டாயமாக அவருடன் மோசமான நிலையில்(நிர்வாணமாக) நிற்க வைத்துப் புகைப்படம் எடுத்து விட்டனர். எனது நகைகளையும்,பணத்தையும் பிடுங்கிக் கொண்டனர். இதுதான் நடந்தது என்றார்.

இந் நிலையில் கண்டரரு மோகனரு சர்ச்சையால் ஐயப்பன் கோவிலுக்கு களங்கம்நேர்ந்து விட்டதாக கூறியுள்ள திருவாங்கூர் தேவசம் போர்டு, அதற்குரிய பரிகாரபூஜைகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+