கடலூர்-165 மேற்கு வங்க கொத்தடிமைகள் மீட்பு
கடலூர்:
மேற்கு வங்க மாநிலத்திலிருந்து நாகப்பட்டனத்திற்கு அழைத்து வரப்பட்ட 165கொத்தடிமைகளை கடலூர் ரயில் நிலையத்தில் போலீஸார் மீட்டனர். அவர்களுடன் 50சிறார் தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்.
சென்னை தாம்பரத்திலிருந்து, மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்,கொத்தடிமைகளும், சிறார் தொழிலாளர்களும் அழைத்துச் செல்லப்படுவதாக கடலூர்மாவட்ட போலீஸாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து கடலூர் ரயில் நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுத் தயார்நிலையில் இருந்தனர். ரயில் கடலூர் நிலையத்தை அடைந்ததும் போலீஸார் ரயிலில்ஏறி சோதனை நடத்தினர்.
அப்போது மேற்கு வங்க மாநிலத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 165 பேரை மீட்டுகீழே இறக்கினர். இதேபோல 50 சிறுவர் தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, தாங்கள் மேற்கு வங்க மாநிலத்திலிருந்துவருவதாகவும், நாகப்பட்டனத்தில் உள்ள இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தில்(ஓ.என்.ஜி.சி.) காண்ட்ராக்ட் வேலை பார்ப்பதற்காக தாங்கள் அழைத்துச்செல்லப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மிகவும் சொற்ப சம்பளத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் வேலை நிறுவனம்ஒன்று இவர்களை அழைத்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இவர்களை மீண்டும் மேற்கு வங்க மாநிலத்திற்கு திருப்பி அனுப்ப போலீஸார்நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications