இன்று வங்கிகள் வேலை நிறுத்தம்!
டெல்லி:
நாடு முழுவதும் 5 லட்சம் பொதுத் துறை வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்கின்றனர். இதனால் அனைத்து வங்கிப் பணிகளும் கடுமையாகபாதிக்கும்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம்,இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்திற்குஅழைப்பு விடுத்துள்ளன.ஏ.டி.எம். சேவையை தனியாரிடம் விடுவது, சிறு சிறு வங்கிகளை பெரியவங்கிகளுடன் இணைக்கும் முடிவு உள்ளிட்டவற்றைக் கண்டித்து இந்த ஒரு நாள்அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
அனைத்து தேசியமயமாக்கப்படட வங்கிகளும் இதில் பங்கெடுக்கின்றன. இருப்பினும்பாரத ஸ்டேட் வங்கி, அதன் இணை வங்கிகள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவைஇதில் கலந்து கொள்ளவில்லை.
வங்கிப் பணிகளில் காலியாக உள்ள 1 லட்சம் இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தில் நாடு முழுவதும் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்தக் கோரிக்கைக்களை வலியுறுத்தி இந்த ஆண்டில் நடக்கும் 3வது அடையாளவேலைநிறுத்தப் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
