லெபனானில் நிவாரணப்பணிகளுக்கு ரூ.10 கோடி உதவி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

லெபனானில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள இந்தியா ரூ. 10 கோடி வழங்கும் எனபிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில்,

இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அந்தப்பிராந்தியம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இப் பிரச்சினையைமுடிவுக்கு கொண்டு வர உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும்.

இரு நாடுகளுக்குமிடையிலான இந்தப் பதற்றம் பெரும் கவலையளிப்பதாக உள்ளது.குறிப்பாக லெவனானில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின்போக்கு பெரும் கவலையளிக்கிறது. லெனானில் பெண்கள், குழந்தைகள் அதிகஅளவில் பலியாகியுள்ளனர்.

லெபனானுக்கு பார்வையாளர்களாக சென்ற ஐநா அதிகாரிகள் 4 பேர் இஸ்ரேல்குண்டுவீச்சில் கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

லெபனானில் நிவாரணப் பணிகளுக்காக இந்தியா ரூ. 10 கோடி வழங்கும் என்றார்.

ஹீரோவாகும் ஹிஸ்புல்லா தலைவர்:

இதற்கிடையே, இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களை சமாளித்து பதில் தாக்குதல்நடத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் ஹசன் நசரல்லாவுக்குலெபனான், பாலஸ்தீனம் உள்ளிட்ட அரபு நாடுகளில் செல்வாக்கு கிடுகிடுவெனஉயர்ந்து வருகிறது.

முன்னாள் எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசருக்குப் பிறகு மிகவும் வலிமையானஅரபுத் தலைவராக அவரை அரபு நாடுகளின் மக்கள் புகழ்கின்றனர்.

சொன்னதை செய்து காட்டுபவர் என்று நசரல்லாவை அரபியே நாடுகளின் மக்கள்புகழ்கின்றனர்.

ஈரானில் நடந்த பேரணியில், நசரல்லா தொடர்ந்து இஸ்ரேல் படைகளைத் தாக்கவேண்டும். டெல் அவிவ் நகரை தரைமட்டமாக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கானமக்கள் கோஷமிட்டனர்.

பாலஸ்தீனத்திலும் நசரல்லா ஆதரவு பேரணிகள் நடந்து வருகின்றன.

15 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் கடும் தாக்குதலுக்கு லெபனான் நாட்டுராணுவம் பதிலடி தராமல் இருக்கும் நிலையில், ஹிஸ்புல்லா படையினர் கடும் பதிலடிதந்து இஸ்ரேலுக்கு ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில் நசரல்லாவின் பேச்சு அடங்கிய ஆடியோ கேசட் லெபனான்தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது. அதில்,

லெபனானில் இஸ்ரேல் படைகள் மேலும் கடுமையான விளைவுகளை சந்திககும்.இஸ்ரேல் படைகளை விரட்டியடிப்பதே எங்களது குறிக்கோள். இதற்காக லெபனானில்உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் நாங்கள் போராடுவோம். எங்களதுயுத்தம கொரில்லா பாணி யுத்தமாகும்.

எங்களுக்கு என்ன இழப்பு ஏற்படுகிறது என்பதை இதில பார்க்கக் கூடாது. மாறாகா,இஸ்ரேலுக்கு எப்படி பாதிப்புகளை ஏற்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம் என்றுமுழங்குகியுள்ளார் நசரல்லா.

நிரம்பி வழியும் அகதிகள்:

போருக்கு முடிவு தெரியாத நிலையில், தெற்கு லெபானாலிருந்து தப்பி வரும்அகதிகள் சிடோன் நகரில் குவிந்து வருகின்றனர்.

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் பெரும்பாலான பகுதிகள் சிக்கித் தவிக்கின்றனஎன்றாலும் தெற்கு லெபனான்தான் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.இப்பகுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்க இடம்பெயர்ந்து வருகின்றனர்.

தப்பி வரும் அனைவரும் தெற்கு லெபனானின் பெரிய நகரான சிடோன் நகரில்குவிந்து வருகின்றனர். இங்குள்ள பள்ளிக் கூடங்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு லெபனானின் பல்வேறு பகுதிகளில் தவித்துக் கொண்டிருப்பவர்கள் பல்வேறுகார்கள், வாகனங்கள் மூலம் சிடோன் நகருக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

சிடோன் நகரம் பெரிய நகராக இருந்தாலும் கூட ஏழரை லட்சம் பேரைத் தாங்கமுடியாமல் திணறி வருகிறது. சில நாட்களியே இந்த நகரின் மக்கள் தொகை 35சதவீதம் உயர்ந்திருப்பதாக அந்நகரின் தலைவர் அப்துல் ரஹமான் அல் பிஸ்ரிகூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+