கடல்கொந்தளிப்பில் சிக்கி சுற்றுலா பயணி பலி!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சிக்கி சுற்றுலா பயணி ஒருவர் பலியானார்.

கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு நிலவுகிறது. அடிக்கடிகடல் உள்வாங்குவதும் நிகழ்ந்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே பீதி நிலவிவருகிறது.

கன்னியாகுமரியில் நேற்று கடல் உள்வாங்கியதால் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலைதிருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் பீதியடைந்து கடற்கரையிலிருந்து வெளியேறினர்.

இந்தச்சூழ்நிலையில் கன்னியாகுமரியில் இன்று பிற்பகல் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. கடல் அலைகள்கிட்டத்தட்ட 10 அடி உயரம் வரை எழும்பியதால் மக்கள் பீதியடைந்தனர். சுற்றுலாப் பயணிகள்கடற்கரையிலிருந்து வேகம் வேகமாக வெளியேறினர்.

அப்போது சங்கிலித்துறை என்ற இடத்தில் ஒரு சுற்றுலாப் பயணி கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுஇறந்தார். அவரது உடல் மீடகப்பட்டு விட்டது.அவர் யார், எந்த ஊர் என்பது தெரியவிலலை.

மேல் மணக்குடி, கீழ் மணக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. இதனால்மீனவர்கள் 2வது நாளாக மீன் பிடிக்கச் செல்லவில்லை.

தலைநகர் சென்னையிலும் இன்று கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. அதிகாலையில் கிட்டத்தட்ட 20 அடிவரையிலும் அலைகள் எழுந்ததால் மீனவர்கள் பீதியடைந்தனர். இதனால் வாக்கிங்போனவர்கள் பீதியடைந்துபாதியிலேயே வீட்டுக்கு நடையைக் கட்டினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+