ராஜீவ் கொலை-சட்டமன்றத்தில் விவாதம்
சென்னை:
ராஜீவ் காந்தி கொலையாகப் போகிறார் என்று முன்பே ஜெயலலிதாவுக்கு தெரியுமா?என்று சட்டசபையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கேள்வி எழுப்பியுனார்.
சட்டசபையில் நடந்த பட்ஜெட் விவாதம் வருமாறு,அனிதா ராதாகிருஷ்ணன் (அதிமுக): பெருந்தலைவரை விமர்சித்தவர்கள் எல்லாம்இப்போது அவரை போற்றுகின்ற நிலையை உருவாக்கியவர் ஜெயலலிதா தான்.
டி.சுதர்சனம் (காங்கிரஸ்): ரத்தம் படிந்த ஜட்டியுடன் கூடிய ராஜீவ் காந்தியின் படத்தைபோட்டு நாங்கள் வெற்றி பெறவில்லை என்று (ஜெயலலிதா) சொன்னதையும் இங்கேபதிவு செய்கிறேன்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: ராஜீவ் காந்தியை பற்றி பேசக்கூடாது என்றுநினைத்தேன். விவாதம் என்று வந்த பிறகு அதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல்பிரசாரத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் வந்தார்.
அப்போது அதிமுகவில் இருந்து எந்த தலைவரும் அவர் பங்கேற்கும் கூட்டத்தில்கலந்து கொள்ளவில்லை. அவர் மரணமடைந்த பிறகு அவரது உடலை பெற்றுசெல்வதற்காக வந்த சோனியாவை பார்க்கக் கூட அதிமுகவினர் யாரும்செல்லவில்லை.
ஒரு கூட்டணி கட்சி தலைவர் இறந்துவிட்டால், அவரை போய் பார்ப்பதுகூட்டணியில் உள்ள தலைவரின் கடமையல்லவா? கொலை நடக்கப் போகிறது என்றுமுன்பே தெரிந்து கொண்டதைப் போல (இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புதெரிவித்தனர்) அவரது கொலைக்குப் பிறகும் சோனியாவுக்கு ஆறுதல் சொல்லாததுசந்தேகத்தை எழுப்புகிறது.
திமுக மீது பழி சுமத்தப்பட்டது உண்மையில்லை என்பதை சோனியா உணர்ந்தார்.சோனியாதான் இந்தியாவின் ஒரே தலைவர் என்று கலைஞர் தான் முதலில் சொன்னார்.
தம்பிதுரை (அதிமுக): முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சுற்றுப்பயணம் அப்போதுதிடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பிரசாரம்செய்தார். பாதுகாப்பு கருதி இருவரும் ஒரே கூட்டத்தில் பேசக்கூடாது என்றுசொல்லப்பட்டது.
ஆனால் அதன்பின்பு ஜெயலலிதா டெல்லிக்கு சென்று ஆறுதல் கூறினார் திமுகவினர்யாராவது சென்று ஆறுதல் சொன்னார்களா என்று சொல்ல வேண்டும். (திமுகவினர்கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)
அமைச்சர் பொன்முடி: இருவரும் ஒரே கூட்டத்தில் பேசினால் பாதுகாப்பு இருக்காதுஎன்று போலீஸ் சொல்லி இருக்கிறது. அப்படி பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போதுஅவரை பேச அனுமதிக்கலாமா?
தம்பிதுரை: அப்போது யார் ஆட்சியில் இருந்தது? இந்த நிகழ்ச்சி நடக்கும் என்றுயாருக்கு தெரியும்?
(இவ்வாரு தம்பிதுரை பேசும் போது அதிமுக உறுப்பினர்கள் சிலர் எழுந்து பேசமுயன்றனர். துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி அவர்களுக்கு அனுமதி தரவில்லை)
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications