அதிமுக ஆட்சியில் தேர்வான டிரைவர்களுக்கு பணி நியமனம் ரத்து!
மதுரை:
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களின் பணி நியமன உத்தரவை திமுக அரசு ரத்து செய்துள்ளது.
அதிமுக ஆட்சியின்ல் போக்குவரத்துக் கழகங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் டிரைவர்கள் உட்பட ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டுஅக்டோபரில் நடந்த நேர்முகத் தேர்வில் இவர்கள் கலந்து கொண்டனர்.வேலைக்காக அதிமுகவினருக்கு கப்பமும் கட்டினர். ஆனாலும் அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வரவில்லை.வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், போராட்டம் நடத்துவோம் என மிரட்டியும்பார்த்தனர்.
இதையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் இவர்களுக்கு நியமன உத்தரவுகள் கிடைத்தன. இந்த நியமன உத்தரவுகளைமுன் தேதியிட்டுத் தந்தது அதிமுக அரசு. இந் நிலையில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பும் வெளிவந்துவிட்டது.
இதனால் இவர்களை பணியில் சேர்ப்பதை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது. தேர்தலில்அதிமுக தோற்றுவிட கொடுத்த காசு என்னவாகுமோ வேலை என்னவாகுமோ என்று இவர்கள் தவித்து வந்தனர்.
இந் நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் இவர்களது பணி நியமனத்தை ரத்து செய்து அரசு கடிதம்அனுப்பியுள்ளது.
அதில், சென்னை உயர் நீதிமன்றம் ரிட் மனுக்களின் மீது அளித்த தீர்ப்பின்படி ஏற்கனவே தற்காலிக பணிஅடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும்,அத்தகைய நபர்களை வேலை இழந்த தொழிலாளர்களாக கருதப்பட வேண்டும் எனவும் கோர்ட்உத்தரவிட்டுள்ளதால் உங்களுடைய நியமன உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications