உலகின் குஷியான நாடு-125வது இடத்தில் இந்தியா
லண்டன்:
உலகிலேயே மக்கள் மிக மகிழ்ச்சியாக வாழும் நாடு என்ற பெயரை டென்மார்க் தட்டிச்சென்றுள்ளது. இந்தியாவுக்கு 125வது இடம் கிடைத்துள்ளது. கடைசி இடத்தில்புரூண்டி உள்ளது.
இங்கிலாந்தின் லீசெஸ்டர் பல்கலைக்கழக உளவியல் பிரிவு பேராசிரியர்ஆட்ரியன்ஒயிட் என்பவர் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளார்.மொத்தம் 178 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உலகிலேயே மிகவும்சந்தோஷமாக, சோகமாக இருக்கும் நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
இந்த ஆய்வின்படி உலகிலேயே மிகவும் சந்தோஷமான நாடு டென்மார்க் தான்.மிகவும் சோகமான நாடு புரூண்டி. இது பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
யுனெஸ்கோ, சிஐஏ, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின்புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுளளது.
டென்மார்க்குக்கு அடுத்த இடத்தில் ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா, ஐஸ்லாந்து,பஹாமஸ், பின்லாந்து, ஸ்வீடன், பூடான் (அட..), புரூனே, கனடா, அயர்லாந்து,லக்ஸம்பர்க், கோஸ்டாரிகா, மால்டா, ஆண்டிகுவா-பார்புடா, மலேசியா, நியூசிலாந்து,நார்வே, செஷல்ஸ் ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களில் உள்ளன.
இதில் சீனாவுக்கு 82வது இடமும், ஜப்பானுக்கு 90வது இடமும் கிடைத்துள்ளது.இந்தியா 125வது இடத்தில் உள்ளது. நம்மை விட சோகமான நாடாக ரஷ்யா 167வதுஇடத்தில் உள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவும், இந்தியாவும் மகிழ்ச்சியான நாடுகளாகஇல்லை என்பதிலிருந்து மக்கள் தொகைக்கும், மகிழ்ச்சிக்கும் ரொம்பத் தூரம் என்பதுஇந்த ஆய்வின் மூலம் தெரிய வந்திருப்பதாக ஒயிட் கூறியுள்ளார்.
வாழ்க்கைத் தரம், வாழ்க்கையில் திருப்தி உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் ஆய்வில்கலந்து கொண்டோரிடம் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில், மகிழ்ச்சியானநாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 80,000 பேர் இந்த ஆய்வில் பங்கு கொண்டனர். சுகாதாரம், உடல நலம்,பொருளாதாரம், கல்வி அறிவு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் கேள்விகள்கேட்கப்பட்டன.
வாழ்க்கையில் திருப்தி அடைந்துள்ள ஒரு சமுதாயத்தில்தான் வளர்ச்சி, முன்னேற்றம்ஆகியவை சாதகமான கோணத்தில் செல்லும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளனஎன்றார் ஒயிட்.
இங்கிலாந்துக்கு இந்தப் பட்டியலில் 41வது இடம்தான் கிடைத்துள்ளது. உலகின்மிகவும் சோகமான நாடு என்ற பெருமையை ஆப்பிரிக்க நாடான புரூண்டிபெற்றுள்ளது.
அதேபோல காங்கோ, ஜிம்பாப்பே ஆகிய நாடுகள் புரூண்டிக்கு முந்தையஇடங்களைப் பெற்றுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications