பொன்னையன் எங்கே?: கருணாநிதி கேள்வி
சென்னை:
தமிழகத்தில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள்.அது இருப்பதாக சொன்ன பொன்னையன் இப்போது எங்கே இருக்கிறார்? என்றுமுதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் தரிசி நிலம் குறித்து நடந்த விவாதம்:ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): திமுகவின் தேர்தல் அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர்தரிசு நிலம் இருப்பதாகவும், அதை நிலமற்ற ஒவ்வொரு விவசாயிக்கும் இரண்டுஏக்கர் வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறீர்கள். இந்த திட்டத்தைநிறைவேற்றுவீர்களா?
அமைச்சர் பொன்முடி: அரசுக்கு சொந்தமான நிலங்கள் நிச்சயம் ஏழைகளுக்குவழங்கப்படும்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: அதிமுக அரசு 2001-02ம் ஆண்டு தாக்கல் செய்தபட்ஜெட்டில் பயிர் செய்ய ஏற்ற 20 லட்சம் ஹெக்டேர் (50 லட்சம் ஏக்கர்) தரிசுநிலங்கள் இருப்பதாகவும், அதை தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்போவதாகவும் அறிவித்தது. அதன் அடிப்படையில் தான் நாங்கள் தரிசு நிலம் குறித்தபுள்ளி விவரம் தந்தோம்.
முதல்வர் கருணாநிதி: 2001-02ம் ஆண்டின் பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர்பொன்னையன் 43 சதவீத நிலம் சாகுபடி செய்யப்படுவதாகவும், 20 லட்சம்ஹெக்டேர் (50 லட்சம் ஏக்கர்) தரிசு நிலமாகவும் இருப்பதாக தெரிவித்தார். நாங்களும்அதன் அடிப்படையில் தெரிவித்தோம்.
நீங்கள் விரும்பினால் அந்த நிலம் எங்கு இருக்கிறது என்று முன்னாள் முதல்வரிடம்கேட்டறிந்து சொன்னால் அதை மேம்படுத்த இந்த அரசு முன் வரும்.
ஓ.பன்னீர்செல்வம்: நாங்கள் எங்கள் ஆட்சியின் போது 50 லட்சம் ஏக்கர் நிலத்தைபண்படுத்தி விளைச்சல் நிலமாக மாற்றுவோம் என்று தான் கூறினோம்.
முதல்வர் கருணாநிதி: பண்படுத்தியதையும், பண்படுத்த வேண்டிய நிலத்தையும்தருவது தான் எங்கள் ஆசை. நீங்கள் தவறான புள்ளி விவரங்களை தந்துஇருக்கிறீர்கள்.
ஓ.பன்னீர்செல்வம்: அரசு நிலம் உள்ளது, அரசு புறம்போக்கு நிலம் உள்ளது, தனியார்நிலம் உள்ளது என்று மூன்றையும் சேர்த்து தான் நாங்கள் கூறியுள்ளோம். ஆனால்,நீங்கள் அந்த நிலங்களை எல்லாம் ஏழைகளுக்கு தலா இரண்டு ஏக்கர் கொடுக்கப்போகிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். அது எப்படி கொடுக்கப் போகிறீர்கள்?
முதல்வர் கருணாநிதி: தவறான புள்ளி விவரத்தை ஒரு தரமான அரசு தரும் என்றுநாங்கள் எதிர்பார்க்கவில்லை. அரசுக்கு சொந்தமான இடத்தில் இரண்டு ஏக்கர் நிலம்வழங்கப்படும். அரசுக்கு சொந்தம் இல்லாத தரிசு நிலங்களை பண்படுத்திஅவர்களுக்கே தருவோம்.
ஓ.பன்னீர்செல்வம்: நாங்கள் சொன்னது பண்படுத்துவோம் என்று மட்டுமே. ஆனால்,நீங்கள் ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் கொடுக்கப்படும் என்று கூறி இருக்கிறீர்கள்.அதற்கு நிலம் எங்கே இருக்கிறது?
முதல்வர் கருணாநிதி: நிலம் எங்கே இருக்கிறது என்கிறார். நிலம் இருப்பதாகஅறிவித்த பொன்னையன் இப்போது எங்கே இருக்கிறார்? என்றார் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications