இலங்கை-வெளியேறும் டென்மார்க், பின்லாந்து
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இலங்கை விமானப் படைதொடர்ந்து நான்காவது நாளாக குண்டு வீசித் தாக்குதல் நிடத்தி வருகிறது.
திரிகோணமலையில், கதிரவேலி என்ற இடத்தில் வெறுகல் ஆற்றின் குறுக்கேகட்டப்பட்டுள்ள மதகுகளை விடுதலைப் புலிகள் சில நாட்களுக்கு முன்பு மூடிவிட்டனர்.இதனால், அங்கிருந்து பல்வேறு சிங்கள கிராமங்களுக்கு நடந்து வந்த குடிநீர்வினியோகம் தடைபட்டது.
இதையடுத்து விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது இலங்கை விமானப்படை குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இதில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். பலர்காயமடைந்தனர்.
புலிகள் மகாம்கள் மீது மட்டுமல்லாமல், அப்பாவித் தமிழர்கள் வசிக்கும்பகுதிகளிலும் விமானப் படைகுண்டு வீசித் தாக்கி வருகிறது.
விமானப் படையினரின் இந்தத் தாக்குதல் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்தது.இன்றுகாலை முதல் விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்திவருகின்றன.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் திரிகோணமலை மாவட்ட அரசியல் பிரிவுத்தலைவர் எழிலன் கூறுகையில்,
இன்று ஒரு குடிநீர்த் தொட்டி அருகே குண்டு விழுந்தது. அப்பகுதியில்முன்னெச்சரிக்கையாக தமிழர்கள் வெளியேறறப்பட்டதால் உயிரிழப்போ, காயமோஇல்லை. இப்பகுதியில ராணுவத்தினர் ஊடுறுவ முயன்றனர். ஆனால் அவர்களைவிடுதலைப் புலிகளின் தரைப்படையினர் விரட்டி அடித்து விட்டனர் என்றார்.
இந் நிலையில் சில புத்த மத துறவிகள், விடுதலைப் புலிகள் அடைத்துள்ளமதகுகளைத் திறக்க அவர்களாகவே முயன்று வருகின்றனர். அவர்களுக்குத்துணையாக ராணுவ வீரர்களும் அப்பகுதியை நெருங்க முயன்று வருகின்றனர்.
இதற்கிடையே, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த பின்லாந்துநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி வருகின்றனர்.இதேபோல டென்மார்க் நாட்டு பார்வையாளர்களும் இலங்கையிலிருந்துவெளியேறுகிறார்கள்.
இந்த இரு நாடுகள் தவிர கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள ஐரோப்பியநாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கையிலிருந்து செப்டம்பர் 1ம் தேதிக்குள் வெளியேறவேேண்டும் என்று ஏற்கனவே புலிகள் கெடு விதித்துள்ளது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு செய்தித் தொடர்பாளர்தொர்பின்னூர் ஒமர்சன் கூறுகையில், டென்மார்க்கும், பின்லாந்தும் குழுவிலிருந்துவிலகியிருப்பது கவலைதருகிறது. இதனால் நிலைமை மேலும் மோசமடையக் கூடும்.
ஸ்வீடன் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.மேலும் நார்வே, ஐஸ்லாந்து நாடுகளும் இந்த விஷயத்தில் எடுக்கப் போகும்நிடவடிக்கை குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்த நாடுகளும் வெளியேறிவிட்டால் நிலைமை கை மீறிப் போகும் அபாயம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications