தந்திரியை படம் எடுத்தது கூலிப்படை- உதவிய அழகிகள்: மாட்டி விட்டது சாராய அதிபர்?
கொச்சின்:
விபச்சாரப் பெண்களுடன் சபரிமலை தந்திரி ஜாலியோ ஜிங்காலியாக இருந்ததைபடம் எடுத்துத் தந்தது, காசு கொடுத்தால் எதையும் செய்யும் கூலிப் படை எனத் தெரியவந்துள்ளது.
அந்தப் படையினருக்கு சம்பந்தப்பட்ட விபச்சாரப் பெண்களே உதவியாகஇருந்ததாகவும் கூறப்படுகிறது.சபரிமலை தந்திரி மோகனரு சில நாட்களுக்கு முன்பு கொச்சி போலீஸில் ஒரு புகார்கொடுத்தார். அதில் தன்னை ஒருகும்பல் கடத்திச் சென்று ஒரு ஃபிளாட்டுக்குஅழைத்துச் சென்று அங்கிருந்த பெண்களிடம் தன்னை மோசமான நிலையில் வைத்து(பெண்களை நிர்வாணமாய், அருகில் அரைகுறை உடையுடன் தந்திரி) புகைப்படம்எடுத்துக் கொண்டு, நகை, பணம், செல்போன்ஆகியவற்றை பறித்துக் கொண்டுதப்பியதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரித்த கொச்சி போலீஸார், மோகனரு பொய் சொல்கிறார்.மோகனருதான் அந்த வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள சாந்தா என்றபெண்ணுக்கும், மோகனருவுக்கும் நீண்ட காலமாக தொடர்பு உள்ளது. ஒரு வருடத்தில்கிட்டத்தட்ட 20 முறைக்கும் மேலாக மோகனரு இங்கு வந்துள்ளர் என்றுதெரிவித்தனர்.
இதையடுத்து மோகனருவின் தந்திரி பதவி பறிக்கப்பட்டது. இந் நிலையில் மோகனருஇன்னொரு புகார் கொடுத்தார். சாந்தா கணவரை இழந்தவர். அதனால் அவருக்கு நான்உதவிகள் செய்து வந்தேன். இதுதொடர்பாக நான் அவரது வீட்டுக்குச் சென்றபோதுஒருகும்பல் தன்னைக் கட்டாயப்படுத்தி புகைப்படம் எடுத்ததாக கூறியிருந்தார்.
மோகனருவின் இரண்டு புகார்களும் முரண்பாடாக இருந்ததால், போலீஸார்குழப்பமடைந்தனர். இருப்பினும் அவர்களது விசாரணையில் மோகனருவுக்கும்,சாந்தாவுக்கும் தொடர்பு இருப்பது மேலும் உறுதியாகியுள்ளது.
ஆனால் தந்திரியை புகைப்படம் எடுத்தது யார் என்பது குறித்து போலீஸாருக்குபுரியாமல்இருந்து வந்தது. இந் நிலையில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள்வெளியாகியுள்ளன.
தந்திரியையும், சாந்தாவையும் ஆபாசமான கோலத்தில் புகைப்படம் எடுத்தது,கொச்சியைச் சேர்ந்த ஒரு பழைய குற்றவாளிக் கும்பல்தான் என்பதுதெரியவந்துள்ளது.
6 பேர் கொண்ட இந்தக் கூலிப் படை காசுக்காக எதையும் செய்யும் ஆட்கள். இவர்கள்தான் மோகனருவை புகைப்படம் எடுத்துள்ளனர் என்பது இப்போதுதெரியவந்துள்ளது.
இவர்களை அங்கே சென்று புகைப்படம் எடுக்குமாறு ஏவியது யார்? அவர்களுக்குப்பின்னால் இருப்பவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
கேரளத்தில் ஈழவா சமூகத்தைச் சேர்ந்த மிகப் பெரிய சாராய அதிபர் இவர்களை காசுகொடுத்து அனுப்பி படம் எடுக்க வைத்தார் என்றும் கூறப்படுகிறது.
அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டை தனது கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வர முயன்று வருபவர் இந்த சாராய அதிபர். ஆனால், அவருக்கு தந்திரிகள்அனைவரும் எதிராக உள்ளனர்.
இதனால் தான் கூலிப் படையை வைத்து, தந்திரியை விபச்சாரப் பெண்களுடன்கையும் களவுமாகப் பிடித்து, படமும் எடுத்து தந்திரியின் பெயரை நாறடித்துள்ளார்அந்த சாராய அதிபர் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, மோகனருவுடன் இருந்ததாக கூறப்படும் விபச்சாரப்பெண்கள் சாந்தாமற்றும் ஷோபா ஆகியோரிடம் போலீஸ் ஐ.ஜி. அருண் குமார்சின்ஹா தொடர்ந்துவிசாரணை நடத்தி வருகிறார்.
தந்திரியை கூலிப் படையினரிடம் மாட்டி விட்டதே இந்தப் பெண்களாகத்தான்இருக்கும் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதற்காக கூலிப்படையினரிடமிருந்து இவர்கள் கணிசமான பணத்தை வாங்கியிருக்கலாம் என்றுகூறப்படுகிறது.
ஒன்று கூலிப்படையே இவர்களே ஏவியிருக்க வேண்டும் அல்லது கூலிப் படையினர்இவர்களை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
கூலிப் படையினரில் சிலர் சாந்தா மற்றும் ஷோபாவை அவர்களது செல்போனில்தொடர்பு கொண்டு பேசியுள்ள விவரமும் வெளி வந்துள்ளது.
மேலும் சபரிமலை கோவில் நிர்வாக அதிகாரிக்கு நெருக்கமான ஒருவரும்சாந்தாவுடன் பேசியுள்ளார். இதனால் அந்த அதிகாரிக்கும் இந்த தந்திரி விவகாரத்தில்தொடர்பிருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications