கடல்கொந்தளிப்பில் சிக்கி சுற்றுலா பயணி பலி!
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சிக்கி சுற்றுலா பயணி ஒருவர் பலியானார்.
கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு நிலவுகிறது. அடிக்கடிகடல் உள்வாங்குவதும் நிகழ்ந்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே பீதி நிலவிவருகிறது.கன்னியாகுமரியில் நேற்று கடல் உள்வாங்கியதால் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலைதிருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் பீதியடைந்து கடற்கரையிலிருந்து வெளியேறினர்.
இந்தச்சூழ்நிலையில் கன்னியாகுமரியில் இன்று பிற்பகல் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. கடல் அலைகள்கிட்டத்தட்ட 10 அடி உயரம் வரை எழும்பியதால் மக்கள் பீதியடைந்தனர். சுற்றுலாப் பயணிகள்கடற்கரையிலிருந்து வேகம் வேகமாக வெளியேறினர்.
அப்போது சங்கிலித்துறை என்ற இடத்தில் ஒரு சுற்றுலாப் பயணி கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுஇறந்தார். அவரது உடல் மீடகப்பட்டு விட்டது.அவர் யார், எந்த ஊர் என்பது தெரியவிலலை.
மேல் மணக்குடி, கீழ் மணக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. இதனால்மீனவர்கள் 2வது நாளாக மீன் பிடிக்கச் செல்லவில்லை.
தலைநகர் சென்னையிலும் இன்று கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. அதிகாலையில் கிட்டத்தட்ட 20 அடிவரையிலும் அலைகள் எழுந்ததால் மீனவர்கள் பீதியடைந்தனர். இதனால் வாக்கிங்போனவர்கள் பீதியடைந்துபாதியிலேயே வீட்டுக்கு நடையைக் கட்டினர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications