திருவாசகம் பாட அனுமதிக்க முடியாது-தீக்ஷிதர்கள்
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தற்போது உள்ள பாரம்பரிய வழிபாட்டு முறைகளில்மாற்றம் செய்ய அனுமதிக்க மாட்டோம். தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்கமுடியாது என்று தீக்ஷிதர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் பாட கோவிலைக் கட்டுப்படுத்தி வரும்தீக்ஷிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சிதம்பரம்நீதிமன்றத்தில் தடை உத்தரவும் வாங்கி வைத்துள்ளனர்.இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து சமீபத்தில் தமிழ்ப் புலவர் ஒருவர் திரளானதமிழார்வலர்களுடன் கோவிலுக்குச் சென்று தேவாரம் பாடப் போவதாக அறிவித்தார்.ஆனால் அவரை போலீஸார் கைது செய்தனர். இது பெரும்சர்ச்சையைஎழுப்பியுள்ளது.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏ செல்வம்பிரச்சனை கிளப்பினார். அப்போது தமிழக கோவிலில் தமிழில் பாட தடையா என்றுமுதல்வர் கருணாநிதியும் ஆதங்கம் வெளியிட்டர். இந்தப் பிரச்சினை குறித்து சட்டவல்லுனர்களுடன் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்அறிவித்துள்ளார்.
இந் நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து தீக்ஷிதர்களுக்கு ஆதரவான சிலஅமைப்புகள் இணைந்து சிதம்பரத்தில் அவசர ஆலோசனை நடத்தின. இதில்தீக்ஷிதர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் போன்றவற்றைஓதுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட முயற்சியைஅனுமதிக்க முடியாது. பாரம்பரியமாக நடந்து வரும் முறைகளை மாற்ற அனுமதிக்கமாட்டோம். அரசும் அதைச் செய்ய முயற்சிக்கக்கூடாதுஎன்று கூறி தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீக்ஷிதர்களின் இந்தத் தீர்மானமும், கண்டனமும் இந்தப் பிரச்சினையை மேலும்சிக்கலாக்கியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications