இஸ்ரேல் தாக்குதல்: 21 குழந்தைகள் உள்பட 40 பேர் பலி!
க்வானா:
தெற்கு லெபனானில் உள்ள க்வானா என்ற கிராமத்தில் இஸ்ரேல் விமானங்கள் இன்றுநடத்திய தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
ஹிஸ்புல்லா அமைப்பினர் பிடித்துச் சென்ற 3 இஸ்ரேல் ராணுவ வீரர்களைமீட்பதற்காக கடந்த 3 வாரங்களாக லெபனான் மீதும் பாலஸ்தீனம் மீதும் இஸ்ரேலியப்படைகள் கடுமையாக தாக்கி வருகின்றன. இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதலில்இதுவரை 600 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தெற்கு லெபனான் சுடுகாடாகமாறியுள்ளது.இஸ்ரேல் தாக்குதலால் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் லெபனானில் பரிதவித்துவருகின்றனர். புகலிடம் தேடி ஓடி வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலுக்கு 4 ஐ.நா.பார்வையாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்துத்தாக்கி வருவதாக இஸ்ரேல் கூறினாலும் இறந்தவர்கள் பெரும்பாலும் அப்பாவிமக்களே.
இதனால் ஐ.நா. சபை கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இஸ்ரேல் உடனடியாக தனதுபோரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை பலமுறை கோரியும் கூட அதைகண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது இஸ்ரேல். லெபனான் மீது உக்கிரமாகதாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், தனது தாக்குதலை சற்றும் தளர்த்திக் கொள்ளாமல்மேலும் மேலும் தீவிரப்படுத்திவருகிறது.
இந்த நிலையில் இன்று தெற்கு லெபனானில் உள்ள க்வானா என்ற கிராமத்தில்இஸ்ரேலிய விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் பல வீடுகள்சேதமடைந்தன. ஒரு 3 மாடிக் கட்டடம் பாதியளவு சேதமடைந்தது. இந்தக்கட்டடத்தில் 100 பேர் வரை வசித்து வந்தனர்.
இஸ்ரேலின் இந்த கொடூரத் தாக்குதலில், 40 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 21 பேர்குழந்தைகள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம். காயமடைந்தவர்களைமீட்புப் படையினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வருகின்றனர்.ஐ.நா. கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்
இதற்கிடையே, லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் சிக்கித் தவிக்கும் அப்பாவிமக்கள் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக 3 நாட்களுக்கு சண்டையை நிறுத்தவேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் விடுத்தவேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்து விட்டது.
தற்காலிகமாக போரை நிறுத்துவது நீண்ட கால போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்கும்.இது ஒரு மனிதாபிமான செயலாகவும் கருதப்படும். சர்வதேச படையை இரு நாட்டுஎல்லைகளிலும் நிறுத்த இது உதவும். பேச்சுவார்த்தைக்கும் வழி வகுக்கும் என்றுஅன்னான் தெரிவித்தித்திருந்தார்.
ஆனால் இந்தக் கோரிக்கையை இஸ்ரேல் பரிசீலனை கூட செய்யாமல் ஒரேயடியாகநிராகரித்து விட்டது. ஐ.நா. வேண்டுகோளை ஏற்க முடியாது. இப்படிச் செய்தால்ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்களது பலத்தை பெருக்கிக் கொண்டு விடுவார்கள் எனஇஸ்ரேல் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மெயர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications