பஹ்ரைன் தீவிபத்து: விழுப்புரம், பெரம்பலூர்தொழிலாளர்கள் 17 பேர் பலி - உடல்கள் சென்னை வருகின்றன!
மனாமா:
பஹ்ரைன் நாட்டுத் தலைநகர் மனாமாவில் இந்தியத் தொழிலாளர்கள் தங்கியிருந்தகட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 17 தமிழர்கள் பலியாயினர். தமிழகத்தைசத்சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 80 இந்தியர்கள் படுகாயமடைந்தனர்.
தலைநகர் மனாமாவில் புதாம்பியா என்ற இடத்தில் ராயல் டவர் என்ற ஹோட்டல்கட்டப்பட்டு வருகிறது. இப்பணியில் தமிழகம், கேரளம், ஆந்திராவைச் சேர்ந்த 300பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு 3மாடிக் கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை இரண்டரை மணியளவில் 3 வது மாடியில் பெரும் தீவிபத்துஏற்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 17 தொழிலாளர்கள் பரிதாபமாகஉயிரிழந்தனர். தீயில் சிக்கியும், கரும் புகையில் சிக்கியும் இவர்கள் உயிரிழந்தனர். 80பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தைச்சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அதிகாரிகள் கொண்டுசென்றுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அதிர்ஷடவசமாக உயிர்தப்பிய சீனிவாசன் என்பவர்கூறுகையில், அதிகாலை மூன்று மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. ஏ.சி.சாதனத்திலிருந்து மின்சாரம் கசிவு ஏற்பட்டதால்தான் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள்தான். அவர்களை அடையாளம் கண்டு வருகிறோம் என்றார்.
பஹ்ரைன் தீவிபத்து: கருணாநிதி இரங்கல்
இந்த விபத்து குறித்து முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கலும், அதிர்ச்சியும்தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஹ்ரைன்தலைநகர் மனாமாவில் நடந்த விபத்தில் இந்தியர்கள் 17 பேர், அதுவும் தமிழர்கள்பலியாகியுள்ளனர் என்பது அறிந்து வேதனை அடைந்தேன்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெளியுறவு அமைச்சர் அகமது, பஹ்ரைனில் உள்ள இந்தியத்தூதரகத்தை தொடர்பு கொண்டு இறந்தவர்களின் உடல்களை தமிழகத்திற்குக் கொண்டுவர ஏற்பாடு செய்து வருகிறார் என்பது ஆறுதல் தருகிறது என்று கூறியுள்ளார்கருணாநதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications