சட்டசபையில் ஜெ: மாடத்தில் சசிகலா!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா இன்று சட்டசபைக்கு வந்து கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் பேசுவதை பார்ப்பதற்காக தோழி சசிகலா, அதிமுக பொருளாளர்டி.டி.வி. தினகரன் ஆகியோர் சபைக்கு வந்திருந்தனர்.

பட்ஜெட்டை புறக்கணித்த ஜெயலலிதா, அவையையும் சில நாட்களாகப்புறக்கணித்தார். இந் நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜெயலலிதா சட்டசபைக்குவந்தார்.

அவரை நுழைவாயிலில் நின்றும், தடால் தடால் என காலில் விழுந்து எழுந்து நின்றும்ஓ.பன்னீர்செலவம், செங்கோட்டையன், ஜெயக்குமார், சேகர்பாபு, வளர்மதி,கலைராஜன் ஆகியோர் வரவேற்று சட்டசபை வளாகத்திறகுள் அழைத்துச் சென்றனர்.

பின்னர் உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்திட்ட ஜெயலலிதா, சபைக்குள் சென்றுதனது இருக்கையில் அமர்ந்தார். அவர் உள்ளே நுழைந்தபோது அதிமுகஉறுப்பினர்கள் எழுந்து நின்று பணிவாக வணங்கினர்.

ஜெயலலிதா சபையில் கலந்து கொள்வதைப் பார்த்து ரசிப்பதற்காக உடன் பிறவாசகோதரி சசிகலாவும், அவரது அக்காள் மகனும் அதிமுகவின் புதியபொருளாளருமான தினகரனும் பார்வையாளர்களாக வந்து மாடத்தில்அமர்ந்திருந்தனர்.

முன்னதாக ஜெயலலிதா சட்டசபைக்கு வந்தபோது அவரை அருகில் சென்றுபுகைப்படம் எடுக்க பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் முயன்றனர்.

ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால், மேடம் கொஞ்சம் நில்லுங்கள் என்றுபுகைப்படக்காரர்கள் குரல் கொடுக்கவே, அதை ஏற்ற ஜெயலலிதா சில நொடிகள்நின்று புன்னகைத்தபடி போஸ் கொடுத்து விட்டு பின்னர் உள்ளே சென்றார்.

அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்:

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் அன்பழகன் இன்று பதிலளித்துப் பேசினார். அப்போது எதிர்க் கட்சித் தலைவரான ஜெயலலிதாஅவையை விட்டுச் சென்றுவிட்டார்.

அன்பழகன் பேச ஆரம்பித்தவுடன், அதிமுக கொறடா செங்கோட்டையன் எழுந்து ஏதோ சொல்ல முயன்றார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர்.

அன்பழகன் பேசுகையில், பட்ஜெட் உரைக்கு பதில் உரையைக் கேட்காமல் உங்கள் அம்மா எழுந்து ஓடிவிட்டார் என்றார்.

இதை திமுகவினர் மேஜையைத் தட்டி வரவேற்க, அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கூச்சலிட்டனர். அன்பழகன் பேச்சுக்கு எதிர்ப்புத்தெரிவித்தனர். அவர் பேசியதை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

ஆனால், அதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து அதிமுகவினர் அரசுக்கு எதிராக தொடர்ந்து கூச்சலிட்டர், திமுகவினரும் பதிலுக்கு கூச்சலிட்டதால் அவையில் பெரும் அமளி நிலவியது.

இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். காவலர்கள் விரைந்து வந்துஅதிமுகவினரை கூண்டோடு வெளியேற்றினர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+