சட்டசபையில் ஜெ: மாடத்தில் சசிகலா!
சென்னை:
எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா இன்று சட்டசபைக்கு வந்து கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் பேசுவதை பார்ப்பதற்காக தோழி சசிகலா, அதிமுக பொருளாளர்டி.டி.வி. தினகரன் ஆகியோர் சபைக்கு வந்திருந்தனர்.
பட்ஜெட்டை புறக்கணித்த ஜெயலலிதா, அவையையும் சில நாட்களாகப்புறக்கணித்தார். இந் நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜெயலலிதா சட்டசபைக்குவந்தார்.அவரை நுழைவாயிலில் நின்றும், தடால் தடால் என காலில் விழுந்து எழுந்து நின்றும்ஓ.பன்னீர்செலவம், செங்கோட்டையன், ஜெயக்குமார், சேகர்பாபு, வளர்மதி,கலைராஜன் ஆகியோர் வரவேற்று சட்டசபை வளாகத்திறகுள் அழைத்துச் சென்றனர்.
பின்னர் உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்திட்ட ஜெயலலிதா, சபைக்குள் சென்றுதனது இருக்கையில் அமர்ந்தார். அவர் உள்ளே நுழைந்தபோது அதிமுகஉறுப்பினர்கள் எழுந்து நின்று பணிவாக வணங்கினர்.
ஜெயலலிதா சபையில் கலந்து கொள்வதைப் பார்த்து ரசிப்பதற்காக உடன் பிறவாசகோதரி சசிகலாவும், அவரது அக்காள் மகனும் அதிமுகவின் புதியபொருளாளருமான தினகரனும் பார்வையாளர்களாக வந்து மாடத்தில்அமர்ந்திருந்தனர்.
முன்னதாக ஜெயலலிதா சட்டசபைக்கு வந்தபோது அவரை அருகில் சென்றுபுகைப்படம் எடுக்க பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் முயன்றனர்.
ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால், மேடம் கொஞ்சம் நில்லுங்கள் என்றுபுகைப்படக்காரர்கள் குரல் கொடுக்கவே, அதை ஏற்ற ஜெயலலிதா சில நொடிகள்நின்று புன்னகைத்தபடி போஸ் கொடுத்து விட்டு பின்னர் உள்ளே சென்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications